garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பரிபாடல் --> கடவுள் வாழ்த்து
1. கடவுள் வாழ்த்து
திருமால்

1 - 5 திருமாலும் பலதேவனும்

ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை -- 1
தீயுமிழ் திறனொடு முடிமிசை அணவர,
மாயுடை மலர்மார்பின் மையில்வால் வளைமேனிச்
சேய்உயர் பணைமிசை எழில்வேழம் ஏந்திய
வாய்வாங்கும் வளைநாஞ்சில் ஒருகுழை ஒருவனை! -- 5
(இது தரவு)

6 - 13 திருமாலின் உருவப் புனைவு
எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திருஞெமர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பின்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால்வரை
எரிதிரிந் தன்ன பொன்புனை உடுக்கையை; -- 10
சேவலங் கொடியோய்! நின் வலவயின் நிறுத்து
மேவலுள் பணிந்தமை கூறும்
நாவல் அந்தணர் அருமறைப் பொருளே.
(இது கொச்சகம்)ஒருவனை!

14 - 25 சிதைந்த பகுதி
இணை பிரி யணி துணி பிணிமணி யெரிபுரை விடரிடு சுடா படா
பொலம புனை வினை மலா தெரிதிர டெரி யுருளி கனமிகு முரண
மிகு கடறரு மணியொடு முததி யாததநொணி நெறிசெறி
வெறியுறு முறலவி றலணங கணஙகு விர றறாணி துணிமணி
வெயிலுற ழெழில புகழலா மலா மாரபின னெரிவயிர நுதிநுதி
யெறிபடைய ருதது மலையிவா நவையினிறறுணி படலினமணி
யிய லெறு ழெழி லினிசை யிருளகல -- 20
முறுகிறுகுபுரி யொருபுரி
நாணமலா மலரில கினவளா பருதியினொளிர மணிமார பணிமண
மிக நாறுருவின விரைவளி மிகு கடுவிசை யுடுவுறுதலை நிரை
யிதழணி வயிரிய வமாரைப பொரெழுநதுடனறி ரைததுரைஇய
தான வாசிரமுமிழ புனல பொழி பிழிநதுர முதிரபதிர பலநதொ
டாவ மாவெனற கணை. -- 25

(இளவநான்கும் அராகம்)

26 - 32 திருமாலின் வரலாறு அறிதல் அரிது
பொருவேம் என்றவர் மதம்தபக் கடந்து,
செருமேம் பட்ட செயிர்தீர் அண்ணல்!
இருவர் தாதை! இலங்குபூண் மாஅல்!
தெருள நின்வரவு அறிதல்,
மருளறு தோச்சி முனைவர்க்கும் அரிதே -- 30
(இஃது ஆசிரியம்)
அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன்என்று உரைத்தல் எமக்கெவன் எளிது?
(இது பேரெண்)

யாம் கூறுவன பொறுத்தருள்க -- 33 - 36
அருமைநற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின், வல்லா யாம்இவண் மொழிபவை,

மெல்லிய எனாஅ வெறா அது, அல்லியம் -- 35
திருமறு மார்ப! நீ அருளல் வேண்டும்.
(இஃது ஆசிரியம்)

எல்லாம் நீ -- 37 - 48
விறல்மிகு விழுச்சீர் அந்தணர் காக்கும்
அறனும் ஆர்வலர்க்கு அளியும் நீ!
திறனிலோர்த் திருத்திய தீதுதீர் சிறப்பின்
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ! -- 40
அங்கண்ஏர் வானத்து அணிநிலாத் திகழ்தரும்
திங்களும் தெறுகதிர்க் கனலியும் நீ!
ஐந்தலை உயிரிய அணங்குடை அருந்திறல்
மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ!

நலமுழுது அளைஇய புகரறு காட்சிப் -- 45
புலமும் பூவனும் நாற்றமும் நீ!
வலனுயர் எழிலியும் மாக விசும்பும்
நிலனும் நீடிய இமயமும் நீ!
(இவை ஆறும் பேரெண்)

புகழ்மிக்க முதல்வன் -- 49 - 54
அதனால், (இது தனிச்சொல்)

இன்னோர் அனையை; இனையை யாலென -- 50
அன்னோர் யாம்இவண் காணா மையின்,
பொன்னணி நேமி வலங்கொண்டு ஏந்திய
மன்னுயிர் முதல்வனை! ஆதலின்,
நின்னோர் அனையை;நின் புகழொடும்
பொலிந்தே. (இது சுரிதகம்)

மேலும் சில புனைவுகள் -- 55 - 60

நின் ஒக்கும் புகழ் நிழலவை; -- 55
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரிவளை யினவை;
எள்ளுநர்க் கடந்துஅட்ட இகல்நே மியவை;
மண்ணுறு மணிபாய் உருவினவை;

எண்ணிறந்த புகழவை; எழில் மார்பினவை; -- 60
(இவை சிற்றெண்ணும் பேரெண்ணும் இடையெண்ணும்)

வணக்கமும் வாழ்த்தும் -- 61 - 65
ஆங்கு,
காமரு சுற்றமோடு ஒருங்குநின் அடியுறை
யாமியைந்து ஒன்றுபு வைகலும் பொலிகென,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்;

வாய்மொழிப் புலவ! நின் தாழ்நிழல் தொழுதே. -- 65

(இது சுரிதகம்)

- பாடியவர் பெயர் தெரியவில்லை.

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com