garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பரிபாடல் --> திருமால் பாடல்கள்
                                 
திருமால்
கீரந்தையார்

1 - 14 ஊழிகளும் வராக கற்பமும்

தொன்முறை இயற்கையின் மதியொ. . . . . -- 2
. . . . . . . . . . . . . . . .. மரபிற் றாகப்
பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழூழ் செல்லக்

கருவளர் வானத்து இசையில் தோன்றி, -- 5
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று

உண்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு -- 10
மீண்டும் பீடுயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய

செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை -- 15
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ!நிற் பேணுதும் தொழுதும்.

20 - 27 தொன்னிலைச் (பழையநிலை) சிறப்பு

நீயே, வளையொடு புரையும் வாலி யோற்கவன் -- 20
இளையன் என்போர்க்கு இளையை யாதலும்
புதையிருள் உடுக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு
முதியைஎன் போர்க்கு முதுமை தோன்றலும்
வடுவில் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த

கெடுவில் கேள்வியுள் நடுவா குதலும் -- 25
இந்நிலைத் தெரிபொருள் தேரின், இந்நிலை
நின்நிலைத் தோன்றும்நின் தொன்னிலைச் சிறப்பே.

28 - 35 நிலமகளை மணத்தல்

ஓங்குயர் வானின் வாங்குலில் புரையும்
பூண்அணி கவைஇய வார்அணி நித்திலம்
நித்தில மதாணி அத்தகு மதிமறுச் -- 30
செய்யோள் சேர்ந்தநின் மாசில் அகலம்
வளர்திரை மண்ணிய கிளர்பொறி நாப்பண்
வைவால் மருப்பின் களிறு மணன்அயர்பு,
புள்ளி நிலனும் புரைபடல் அரிதென
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று. -- 35

36 - 51 சங்கும் சக்கரமும்

ஒடியா உள்ளமொடு உருத்துஒருங்கு உடன்இயைந்து,
இடியெதிர் கழறும் கால்உறழ்பு எழுந்தவர்
கொடியறுபு இறுபு, செவிசெவிடு படுபு,
முடிகள் அதிரப் படிநிலை தளர,
நனிமுரல்வளை முடிஅழிபுஇழிபு, -- 40
தலைஇறுபு தாரொடு புரள,
நிலைதொலைபு, வேர்தூர்மடல்
குருகு பறியா, நீளிரும் பனைமிசைப்
பலபதி னாயிரம் குலைதரை உதிர்வபோல்,
நில்லாது ஒருமுறை கொய்பு கூடி, -- 45
ஒருங்குஉருண்டுபிளந்து நெரிந்துஉருள்புசிதறுபு,
அளறுசொரிபு, நிலஞ்சோரச்
சேராரர் இன்னுயிர் செகுக்கும்
போரடு குருசில்! நீ ஏந்திய படையே.
ஒன்னார் உடங்குண்ணும் கூற்றம் உடலே; -- 50
பொன்ஏர்பு அவிர் அழல் நுடக்குஅதன் நிறனே.

52 - 59 உருவும் பண்பும்

நின்னது திகழ்ஒளி, சிறப்புஇருள் திருமணி;
கண்ணே, புகழ்சால் தாமரை அலர்இணைப் பிணையல்;
வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த
நோன்மை, நாடின் இருநிலம்; யாவர்க்கும் -- 55
சாயல், நினது வான்நிறை; என்னும்
நாவல் அந்தணர் அருமறைப் பொருளே.
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்
எவ்வயி னோயும் நீயே.

60 - 68 வேள்வி

செவ்வாய் உவணத்து உயர்கொடி யோயே! -- 60
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,
படிநிலை வேள்வியுள் பற்றியாடு கொளலும்,
புகழியைந்து இசைமறை உறுகனல் முறைமூட்டித்
திகழொளி ஒண்சுடர் வளப்பாடு கொளலும்,
நின்உரு புடன், உண்டி, -- 65
பிறர்உடம் படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு.

69 - 76 வாழ்த்தலும் வேண்டலும்
வாயடை அமிர்தம்நின் மனத்தகத்து அடைத்தர,
மூவா மரபும் ஓவா நோன்மையும் -- 70
சாவா மரபின் அமரர்க்காச் சென்றநின்
. . . . . . . . . . . . . மரபினோய்! நின்னடி
தலையுற வணங்கினேம், பன்மாண் யாமும்
கலியில் நெஞ்சினேம், ஏத்தினேம் வாழ்த்தினேம்;
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும், -- 75
கொடும்பாடு அறியற்க! எம்மறிவு எனவே.

இசைவகுத்தவர்: நன்னாகனார்
பண் : பண்ணுப் பாலையாழ்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com