garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பரிபாடல் --> வையை பாடல்கள்
                         
வையை
ஆசிரியன் நல்லந்துவனார்

1 - 10 மழைவளம்
நிறைகடல் முகந்துஉராய் நிறைந்துநீர் துளும்பும்தம்
பொறைதவிர்பு அசைவிடப் பொழிந்தன்று வானம்;
நிலம்மறை வதுபோல் மலிர்புனல் தலைத்தலைஇ;
மலைய இனம்கலங்க, மலைய மயில்அகவ,
மலைமாசு கழியக் கதழும் அருவி இழியும்
மலிநீர் அதர்பல கெழுவு தாழ்வரை, -- 5
மாசில் பனுவல் புலவர் புகழ்புல
நாவின் புனைந்த நன்கவிதை மாறாமை,
மேவிப் பரந்து விரைந்து வினைநந்தத்
தாயிற்றே தண்ணம் புனல்; 10

11 - 24 வையை வரவும் அதன்விளைவும்
புகை, பூ அவி, ஆ ராதனை அழல்பல ஏந்தி,
நகையமர் காதலரை நாளணிக் கூட்டும்
வகைசாலும் வையை வரவு;
தொடிதோள் செறிப்பத் தோள்வளை இயங்கக்
கொடிசே ராத்திருக் கோவை காழ்கொளத் -- 15
தொகுகதிர் முத்துத் தொடைகலிழ்பு மழுக,
உகிரும் கொடிறும் உண்டசெம் பஞ்சியும்
நகில்அணி அளறு நனிவண்டல் மண்ட,
இலையும் மயிரும் ஈர்ஞ்சாந்து நிழத்த,
முலையும் மார்பும் முயங்கணி மயங்க, -- 20
விருப்புஒன்று பட்டவர் உளநிறை உடைத்தென
வரைச்சிறை உடைத்ததை வையை; வையைத்
திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை, அறைகஎனு
உரைச்சிறைப் பறையெழ, ஊர்ஒலித் தன்று;

25 - 37 புனலாடுவோர் செல்லும் காட்சி
அன்று, போரணி அணியின் புகர்முகம் சிறந்தென, -- 25
நீரணி அணியின் நிரைநிரை பிடிசெல,
ஏரணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின் இகல்மிக நவின்று
தணிபுனல் ஆடும் தகைமிகு போர்க்கண்
துணிபுன லாகத் துறைவேண்டும் மைந்தின் -- 30
அணிஅணி யாகிய தாரர், கருவியர்
அடுபுனல் அதுசெல அவற்றை இழிவர்,
கைம்மான் எருத்தர், கலிமட மாவினர்,
நெய்ம்மாண் சிவிறியர், நீர்மணக் கோட்டினர்,
வெண்கிடை மிதவையர் நன்கிடைத் தேரினர், -- 35
சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை
ஓரிய உறுத்தர, ஊர்ஊர்பு இடம்திரீஇச்

38 - 51 வையை நீரின் மாற்றம்
சேரி இளையர் செலவரு நிலையர்;
வலியர் அல்லோர் துறைதுறை அயர,
மெலியர் அல்லோர் விருந்துபுனல் அயரச், -- 40
சாறும் சேறும் நெய்யும் மலரும்
நாறுபு நிகழும் யாறு வரலாறு;
நாறுபு நிகழும் யாறுகண்டு அழிந்து,
வேறுபடு புனலென, விரைமண்ணுக் கலிழைப்
புலம்புரி அந்தணர் கலங்கினர் மருண்டு, -- 45
மாறுமென் மலரும் தாரும் கோதையும்
வேரும் தூரும் காயும் கிழங்கும்
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நாரரி நறுவம் உகுப்ப நலனழிந்து
வேறா கின்றுஇவ் விரிபுனல் வரவெனச் -- 50
சேறாடு புனலது செலவு;

52 - 60 வெள்ளம் பரவுதல்
வரையழி வாலருவி (வா)தா லாட்டக்
கரையழி வாலருவிக் கால்பா ராட்ட,
இரவிற் புணர்ந்தோர் இடைமுலை அல்கல்
புரைவது பூந்தாரான் குன்றெனக் கூடார்க்கு -- 55
உரையோடு இழிந்துஉராய், ஊரிடை ஓடிச்
சலப்படை யான்இரவில் தாக்கிய தெல்லாம்
புலப்படப் புன்னம் புலரியின் நிலப்படத்
தான் மலர்ந் தன்றே,
தமிழ்வையைத் தண்ணம் புனல். -- 60

61 - 95 ஊடலில் நிகழ்ந்த உரையாடல்
விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்!
தளிர் அறிந்தாய் தாம் இவை.
பணிபசி பண்ப!பண்டு எல்லாம் நனி உருவத்து
என்னோ துவள் கண்டீ;
எய்தும் களவினி நின்மார்பின் தார்வாடக் -- 65
கொய்ததும் வாயாளோ? கொய்தழை கைபற்றிச்
செய்ததும் வாயாளோ? செப்பு.
புனைபுணை ஏறத் தாழ்த்ததை தளிரிவை
நீரின் துவண்ட; சேஎய் குன்றம்; காமர்
பெருக்கன்றோ வையை வரவு!
ஆமாம்; அது ஒக்கும்; காதலங் காமம்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும்; சூளுறல்; வையைப்
பெருக்கன்றோ! பெற்றாய் பிழை.
அருகு பதியாக, அம்பியின் தாழ்ப்பிக்கும் --75
குருகுஇரை தேரக் கிடக்கும் பொழிகாரில்
இன்இள வேனில் இதுவன்றோ? வையை
நின் . . . . .
வையை வயமாக வை;
செல்யாற்றுத் தீம்புனலிற் செல்மரம் போல,
வவ்வுவல் லார்புணை யாகிய மார்பினை -- 80
என்னும் பனியாய், இரவெல்லாம் வைகினை
வையை உடைந்த மடைஅடைத்தக் கண்ணும்,
பின்னும் மலிரும் பிசிர்போல, இன்னும்
அனற்றினை; துன்புஅவிய நீ அடைந்தக்கண்ணும்
பனித்துப் பனிவாரும் கண்ணவர் நெஞ்சம் -- 85
கனற்றுபு காத்தி வரவு
நல்லாள் கரைநிற்ப, நான்குளித்த பைந்தடத்து
நில்லாள் திரைமூழ்கி நீங்கி, எழுந்துஎன்மேல்
அல்லா விழுந்தாளை எய்தி எழுந்து,ஏற்றுயான்
கொள்ளா அளவை, எழும் தேற்றாள், கோதையின் 90
உள்ளழுத்தி யாள்எவளோ? தோய்ந்ததுயாதுஎனத்
தேறித் தெரிய உணர்நீ; பிரிதும்ஓர்
யாறுஉண்டோ? இவ்வையை யாறு;
இவ்வையை யாறென்ற மாறுஎன்னை? கையால்
தலைதொட்டேன் தண்பரங் குன்று. -- 95
96 - 100 முதபெண்டிர் இடித்துரைத்தல்
சினவல்; நின் உண்கண் சிவப்புஅஞ்சு வாற்குத்
துனிநீங்கி, ஆடல் தொடங்கு; துனிநனி
கன்றிடின், காமம் கெடூஉம்; மகள் இவன்
அல்லா நெஞ்சம் உறப்பூட்டக் காய்ந்தே
வல்லிருள் நீயல்; அதுபிழை யாகும்என, -- 100

101 - 104 தலைவி விறலியிடம் கூறுதல்
இல்லவர் ஆட, இரந்து பரந்து உழந்து,
வல்லவர் ஊடல் உணர்த்தர, நல்லாய்!
களிப்பர், குளிப்பர், காமம் கொடிவிட
அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப;

105 - 106 வையை வாழ்த்து
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்தமைந்த காமம்
வாடற்க! வையை நினக்கு.

இசை வகுத்தவர்: மருத்துவன் நல்லச்சுதனார்
பண்: பண்ணுப் பாலையாழ்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com