garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பரிபாடல்
பரிபாடல்

தமிழர்களின் பக்தி இலக்கியங்களை நூல்களின் வாயிலாகவே நாம் அறியலாம். சங்கத் தொகை நூல்களுள் யாப்பில் பெயர் பெற்ற நூல்கள் இரண்டு அவற்றில் ஒன்று கலித்தொகை மற்றொன்று பரிபாடல். பரிபாடலில் மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. அவற்றுள் கிடைக்கப்பெற்றது 22 பாடல்களேயாகும். அவற்றில் திருமாலுக்குரியவை 6 செவ்வேலுக்குரியவை 8 வையை பற்றியது 8 உரைநூல்கள் வழி 2 . முழுப்பாடல்களில் திருமால் பற்றியது ஒன்று மற்றொன்று வையை பற்றியது.



திருமால் வாமனவதாரம் எடுத்துப்பின் ஓங்கி உயர்ந்து உலகளந்து உந்தித் தாமரையில் உதித்தது ஆயிரம் கால்களையுடைய அரவத்தில் பள்ளிக்கொண்டது. கேசி என்னும் அரக்கனை அழித்தது. கண்ணனும் பலதேவனும் ஒருசேர வழிபடப் பெற்றமை முதலியன பரிபாடலுக்குப் பிற தொகை நூல்களுக்கும் உரிய பொதுச் செய்திகளாகும்.

திருமாலைப் பாடிய புலவர்கள் – கீரந்தையார், கடுவெனின் வெயினனார், நல்லெழுநியார், இளம் பெருவழுதியார், என்னும் நால்வராவர். பரிபாடலின் முதற் பாடலும் திரட்டின் முதற் பாடலும் திரட்டின் முதற் பாடலும் திருமாலுக்குரியவை என்றாலும் அவற்றைப் பாடியவர்கள் பெயர் தெரியவில்லை. ஏழுபாடல் திருமாலைப் பற்றியனவாகக் காணப்படுகின்றன. 1,2, 3, 4, 13, 15 திரட்டுப்பாடல் 1 ஆக மொத்தம் 7 பாடல்கள்.

செவ்வேளைப் பற்றி பரிபாடலில் எட்டுப் பாடல்கள் உள்ளன. திருப்பரங் குன்றத்தின் இயற்கை எழில் நலம் கோயில் ஓவியங்கள் அங்கு நிகழ்ந்த காதல் ஊடல் நிகழ்ச்சிகள் முதலியவற்றைப் பற்றி பரிபாடலில் மிகவும் அழகாக சித்தரிக் கின்றது. பாடிய புலவர்கள் – கடுவன் இளவெயினனார், ஆசிரியன் நல்லந்துவனார், குன்றம் பூதனார், கேசவனார், நல்லழிசியார் , நப்பண்ணனார், நல்லச்சுதனார் என்போராவர்.

வையை ஆற்றைத் தவிர வேறு எந்த ஆற்றைப் பற்றியும் தனிப்பாக்கள் எந்த நூலிலும் இல்லை. பரிபாடலில்தான் தமிழ் வையை எனத் தமிழ் அடைகொடுத்து வையையாறு சிறப்பிக்கப்பட்டுள்ளது. திருமாலையும் செவ்வேலையும் வணங்கும் மக்கள் அடுத்து வணங்குவது வையை. வையையை மலரிட்டு ஆராதனைப் பொருட்கள் வழங்கி வழிபாடு செய்தமையை பரிபாடலில் எடுத்துரைக்கப்படுகின்றது. கண்ணகியும் கோவலனும் மதுரைக்கு செல்லும்பொழுது வையைக் கண்டதும் தொழுது வணங்கியதை இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். கடவுளிடம் வரங் கேட்பதை போலவே வையையிடமும் மக்கள் வரங்கேட்பதுண்டு. வையைப் பாடிய புலவர்கள் ஆசிரியன் நல்லந்துவனார் மூன்று பாடலும் மையோடக் கோவனார் கரும்பிள்ளைப் பூதனார் நல்வழுதியார் நல்லழிசியார் ஆகிய நால்வரும் ஒவ்வொரு பாடலும் வையைப் பற்றிப் பாடியுள்ளனர். வையைப் பற்றி 22ஆம் பாடலை பாடிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. வையை பற்றி பாடிய புலவர்கள் ஐவர் பாடலின் எண்ணிக்கை எட்டு.

நல்வழுதியார் வையையின் விரிந்த புகழை
இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர்
நன்பல நன்பல நன்பல வையை
நின்புகழ் கொள்ளாதுஇம் மலர்தலை உலகே..

என்று பாராட்டிக்கூறுவார்.

1. கடவுள் வாழ்த்து

2. திருமால் பற்றிய பாடல்கள்

3. செவ்வேள் பற்றிய பாடல்கள்

4. வையை பற்றிய பாடல்கள்

5. பரிபாடல் திரட்டு

garuda e learning websites, free tamil old website
 
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com