garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பதிற்றுப்பத்து --> இரண்டாம் பத்து பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                            
இரண்டாம் பத்து
ஆசிரியர்: குமட்டூர்க் கண்ணனார்
11. புண் உமிழ் குருதி

வரைமருள் புணரி வான்பிசிர் உடைய
வளிபாய்ந்து அட்ட துளங்குஇரும் கமம்சூல்
நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்குஉடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூர்உடை முழுமுதல் தடிந்த பேரிசைக் -- 5
கடுஞ்சின விறல்வேள் களிறுஊர்ந் தாங்குச்,
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப,
அருநிறம் திறந்த புண்உமிழ் குருதியின்
மணிநிற இரும்கழி நீர்நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல அரண்கொன்று -- 10
முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை;
பலர்மொசிந்து ஓம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்றுஎறி முழங்குபணை செய்த வெல்போர்
நார்அரி நறவின் ஆர மார்பின் -- 15
போர்அடு தானைச் சேர லாத
மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன்உயர் மருப்பின் பழிதீர் யானைப்
பொலன்அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்தநின்
பலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே; -- 20
கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்திலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென் அம் குமரியொடு ஆஇடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே. -- 25

துறை - செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - புண் உமிழ் குருதி

12. மறம் வீங்கு பல் புகழ்

வயவர் வீழ வாள் அரில் மயக்கி
இடம்கவர் கடும்பின் அரசுதலை பனிப்பக்
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே!
தார் அணி எருத்தின் வார் அல் வள்உகிர்
அரிமான் வழங்கும் சாரல் பிறமான் -- 5
தோடுகொள் இனம்நிரை நெஞ்சுஅதிர்ந் தாங்கு
முரசுமுழங்கு நெடுநகர் அரசுதுயில் ஈயாது
மாதிரம் பனிக்கும் மறம்வீங்கு பல்புகழ்
கேட்டற்கு இனிதுநின் செல்வம், கேட்டொறும்
காண்டல் விருப்பொடு கமழும் குளவி -- 10
வாடாப் பைம்மயிர், இளைய ஆடுநடை,
அண்ணல் மழகளிறு அரிஞிமிறு ஓப்பும்
கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்தி
வந்துஅவண் இறுத்த இரும்பேர் ஒக்கல்
தொல்பசி உழந்த பழங்கண் வீழ -- 15
எஃகுபோழ்ந்து அறுத்த வால்நிணக் கொழுங்குறை
மைஊன் பெய்த வெண்நெல் வெண்சோறு
நனைஅமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு அன்ன
நிலம்தின் சிதாஅர் களைந்த பின்றை, -- 20
நூலாக் கலிங்கம் வால்அரைக் கொளீஇ
வணர்இரும் கதுப்பின் வாங்குஅமை மென்தோள்
வசைஇல் மகளிர் வயங்குஇழை அணிய
அமர்புமெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிதுநின் பெரும்கலி மகிழ்வே. -- 25

துறை - செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - மறம் வீங்கு பல்புகழ்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com