garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பதிற்றுப்பத்து --> மூன்றாம் பத்து பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                            
மூன்றாம் பத்து
ஆசிரியர்: பாலைக் கௌதமனார்
21. அடுநெய் ஆவுதி

சொல்பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம்என்று
ஐந்துடன் போற்றி அவைதுணை யாக,
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக்
காலை அன்ன சீர்சால் வாய்மொழி
உருகெழு மரபின் கடவுட் பேணியர், -- 5
கொண்ட தீயின் சுடர்எழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெயர் ஆவுதி;
வருநர் வரையார் வார வேண்டி,
விருந்துகண் மாறாது உணீஇய, பாசவர்
ஊனத்து அழித்த வால்நிணக் கொழுங்குறை -- 10
குய்இடு தோறும் ஆனாது ஆர்ப்பக்
கடல்ஒலி கொண்டு செழுநகர் நடுவண்
அடுமை எழுந்த அடுநெய் ஆவுதி;
இரண்டுடன் கமழும் நாற்றமொடு வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி -- 15
ஆர்வளம் பழுனிய ஐயம்தீர் சிறப்பின்
மாரிஅம் கள்ளின் போர்வல் யானைப்
போர்ப்புஉறு முரசம் கறங்க ஆர்ப்புச்சிறந்து
நன்கலம் தரூஉம் மண்படு மார்ப!
முல்லைக் கண்ணிப் பல்ஆன் கோவலர் -- 20
புல்லுடை வியன்புலம் பல்ஆ பரப்பிக்
கல்உயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉம்
மிதிஅல் செருப்பின் பூழியர் கோவே!
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை!
பல்பயம் தழீஇய பயம்கெழு நெடுங்கோட்டு -- 25
நீர்அறல் மருங்கு வழிப்படாப் பாகுடிப்
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சாச்
சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய
நேர்உயர் நெடுவரை அயிரைப் பொருந!
யாண்டுபிழைப்பு அறியாது பயம்மழை சுரந்து -- 30
நோய்இல் மாந்தர்க்கு ஊழி ஆக,
மண்ணா வாயின் மணம்கமழ் கொண்டு
கார்மலர் கமழும் தாழ்இருங் கூந்தல்
ஒரீஇயின போல இரவுமலர் நின்று
திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண் -- 35
அலங்கிய காந்தள் இலங்குநீர் அழுவத்து
வேய்உறழ் பணைத்தோள் இவளோடு
ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே!

துறை - செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - அடு நெய் ஆவுதி

22. கயிறு குறுமுகவை

சினனே, காமம், கழிகண் ணோட்டம்,
அச்சம், பொய்ச்சொல், அன்புமிக உடைமை,
தெறல்கடு மையொடு பிறவும்இவ் உலகத்து
அறம்தெரி திகிரிக்கு வழிஅடை ஆகும்,
தீதுசேண் இகந்து, நன்றுமிகப் புரிந்து, -- 5
கடலும் கானமும் பலபயம் உதவப்,
பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது,
மைஇல் அறிவினர் செவ்விதின் நடந்துதம்
அமர்துணைப் பிரியாது, பாத்துண்டு மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணிஇன்று கழிய -- 10
ஊழி உய்த்த உரவோர் உம்பல்!
பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச்
சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல்
கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்
ஆகெழு கொங்கர் நாடுஅகப் படுத்த -- 15
வேல்கெழு தானை வெருவரு தோன்றல்!
உளைப் பொலிந்த மா,
இழைப் பொலிந்த களிறு,
வம்பு பரந்த தேர்,
அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு, -- 20
துஞ்சுமரம் துவன்றிய மலர்அகன் பறந்தலை
ஓங்குநிலை வாயில் தூங்குபு தகைத்த
வில்விசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
நெடுமதில் நிரைப்பதணத்து -- 25
அண்ணல்அம் பெருங்கோட்டு அகப்பா எறிந்த
பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ!
போர்த்துஎறிந்த பறையால் புனல்செறுக் குநரும்,
நீர்த்தரு பூசலின் அம்புஅழிக் குநரும்,
ஒலித்தலை விழவின் மலியும் யாணர் -- 30
நாடுகெழு தண்பணை சீறினை, ஆதலின்
குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றிப்
பாய்இருள் அகற்றும் பயம்கெழு பண்பின்
ஞாயிறு கோடா நன்பகல் அமயத்துக்
கவலை வெண்நரி கூஉம்முறை பயிற்றிக் -- 35
கழல்கண் கூகைக் குழறுகுரல் பாணிக்
கருங்கண் பேய்மகள் வழங்கும்
பெரும்பாழ் ஆகும்மன் அளிய தாமே!

துறை - வஞ்சித் துறைப் பாடாண்பாட்டு
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற் சீர் வண்ணமும்
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் - கயிறு குறு முகவை

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com