garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பதிற்றுப்பத்து --> நான்காம் பத்து பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                            
நான்காம் பத்து
ஆசிரியர்: காப்பியாற்றுக் காப்பியனார்
31. கமழ் குரல் துழாய்

குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்குக்
கைசுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால்வேறு நனந்தலை ஒருங்குஎழுந்து ஒலிப்பத்,
தெள்உயர் வடிமணி எறியுநர் “கல்” என -- 5
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி,
வண்டுஊது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
கண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி,
நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர; -- 10
மணிநிற மைஇருள் அகல நிலாவிரிபு
கோடுகூடு மதியம் இயல்உற் றாங்குத்
துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்டு
ஆண்கடன் இறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு
கருவி வானம் தண்தளி தலைஇய -- 15
வடதெற்கு விலங்கி விலகுதலைத்து எழிலிய
பனிவார் விண்டு விறல்வரை அற்றே;
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்குஎயில் கதவம் காவல் கொண்ட
எழூஉநிவந் தன்ன பரேர்எறுழ் முழவுத்தோள் -- 20
வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து
வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
வண்டன் அனையைமன் நீயே; வண்டுபட
ஒலிந்த கூந்தல் அறம்சால் கற்பின்
குழைக்குவிளக்கு ஆகிய ஒண்ணுதல் பொன்னின் -- 25
இழைக்கு விளக்கு ஆகிய அவ்வாங்கு உந்தி
விசும்புவழங்கு மகளி ருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள்நின் தொல்நகர்ச் செல்வி,
நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன்ஏர்பு
வியன்பணை முழங்கும் வேல்மூசு அழுவத்து -- 30
அடங்கிய புடையல் பொலம்கழல் நோன்தாள்
ஒடுங்காத் தெவ்வர் ஊக்குஅறக் கடைஇப்
புறக்கொடை எறியார்நின் மறப்படை கொள்ளும்
நகைவர்க்கு அரணம் ஆகிப் பகைவர்க்குச்
சூர்நிகழ்ந் தற்றுநின் தானை, -- 35
போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே.

துறை - செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - கமழ்குரல் துழாய்

32. கழை அமல் கழனி

மாண்டனை பலவே போர்மிகு குருசில்நீ!
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்
முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற
மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று
துப்புத்துவர் போகப் பெருங்கிளை உவப்ப -- 5
ஈத்துஆன்று ஆனா இடனுடை வளனும்,
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்,
எல்லாம் எண்ணின் இடுகழங்கு தபுந:
கொன்ஒன்று மருண்டனென் அடுபோர்க் கொற்றவ:
நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப் -- 10
பெருமலை யானையொடு புலம்கெட இறுத்துத்
தடந்தாள் நாரை படிந்துஇரை கவரும்
முடந்தை நெல்லின் கழைஅமல் கழனிப்
பிழையா விளையுள் நாடுஅகப் படுத்து
வையா மாலையர் வசையுநர்க் கறுத்த -- 15
பகைவர் தேஎத் தாயினும்
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே!

துறை - செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - கழைஅமல் கழனி.

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com