garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பதிற்றுப்பத்து --> ஐந்தாம் பத்து பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                            
ஐந்தாம் பத்து
ஆசிரியர் : பரணர்
41. சுடர் வீ வேங்கை

புணர்புரி நரம்பின் தீம்தொடை பழுனிய
வணர்அமை நல்யாழ் இளையர் பொறுப்பப்
பண்அமை முழவும் பதலையும் பிறவும்
கண்அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கிக்
காவில் தகைத்த துறைகூடு கலப்பையர் -- 5
கைவல் இளையர் கடவுட் பழிச்ச,
மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு
வரைசேர்பு எழுந்த சுடர்வீ வேங்கைப்
பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்து, தன்
மாஇரும் சென்னி அணிபெற மிலைச்சிச் -- 10
சேஎர் உற்ற செல்படை மறவர்
தண்டுடை வலத்தர் போர்எதிர்ந் தாங்கு,
வழைஅமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்
மழைபெயல் மாறிய கழைதிரங்கு அத்தம்
ஒன்றுஇரண்டு அல,பல கழிந்து, திண்தேர் -- 15
வசைஇல் நெடுந்தகை! காண்குவந் திசினே;
தாவல் உய்யுமோ மற்றே? தாவாது
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முரசுடைப் பெருஞ்சமத்து அரசுபடக் கடந்து,
வெவ்வர் ஓச்சம் பெருகத் தெவ்வர் -- 20
மிளகுஎறி உலக்கையின் இருந்தலை இடித்து,
வைகுஆர்ப்பு எழுந்த மைபடு பரப்பின்
எடுத்துஏறு ஏய கடிப்புடை வியன்கண்
வலம்படு சீர்த்தி ஒருங்குடன் இயைந்து
கால்உளைக் கடும்பிசிர் உடைய வால்உளைக் -- 25
கடும்பரிப் புரவி ஊர்ந்தநின்
படுந்திரைப் பனிக்கடல் உழந்த தாளே.

துறை - காட்சி வாழ்த்து
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - சுடர் வீ வேங்கை

42. தசும்பு துளங்கு இருக்கை

இரும்பனம் புடையல் ஈகை வான்கழல்
மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ஊசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது -- 5
தும்பை சூடாது மலைந்த மாட்சி
அன்னோர் பெரும! நன்னுதல் கணவ!
அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ!
மைந்துடை நல்லமர்க் கடந்து வலம்தரீஇ
இஞ்சிவீ விராய பைந்தார் பூட்டிச் -- 10
சாந்துபுறத்து எறிந்த தசும்புதுளங்கு இருக்கைத்
தீம்சேறு விளைந்த மணிநிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்து,
கோடியர் பெருங்கிளை வாழ, ஆடியல்
உளைஅவிர் கலிமாப் பொழிந்தவை, எண்ணின்; -- 15
மன்பதை மருள அரசுபடக் கடந்து
முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர்,
ஒளிறுநிலை உயர்மருப்பு ஏந்திய களிறுஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்த, நின்
தேரொடு சுற்றம் உலகுடன் மூய -- 20
மாஇரும் தெண்கடல் மலிதிரைப் பௌவத்து
வெண்தலைக் குரூஉப்பிசிர் உடையத்
தண்பல வரூஉம் புணரியின் பலவே.

துறை - செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - தசும்பு துளங்கு இருக்கை

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com