garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பதிற்றுப்பத்து --> ஏழாம் பத்து பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                            
ஏழாம் பத்து
ஆசிரியர்: கபிலர்
63. அருவி ஆம்பல்

பார்ப்பார்க்கு அல்லது பணிபுஅறி யலையே,
பணியா உள்ளமொடு அணிவரக் கெழீஇ
நட்டோர்க்கு அல்லது கண்அஞ் சலையே,
வணங்குசிலை பொருதநின் மணம்கமழ் அகலம்
மகளிர்க்கு அல்லது மலர்ப்புஅறி யலையே, -- 5
நிலம்திறம் பெயரும் காலை ஆயினும்
கிளந்த சொல்நீ பொய்ப்புஅறி யலையே,
சிறிஇலை உழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்தமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி -- 10
ஒருமுற்று இருவர் ஒட்டிய ஒள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே!
ஆடுபெற்று அழிந்த மள்ளர் மாறி
நீகண்டு அனையேம் என்றனர் நீயும்
நும்நுகம் கொண்டுஇனும் வென்றோய் அதனால் -- 15
செல்வக் கோவே! சேரலர் மருக!
கால்திரை எடுத்த முழங்குகுரல் வேலி
நனந்தலை உலகம் செய்தநன்று உண்டுஎனின்
அடைஅடுப்பு அறியா அருவி ஆம்பல்
ஆயிரம் வெள்ள ஊழி -- 20
வாழி ஆத, வாழிய பலவே.

துறை - செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - அருவி ஆம்பல்

64. உரை சால் வேள்வி

வலம்படு முரசின் வாய்வாள் கொற்றுத்துப்
பொலம்பூண் வேந்தர் பலர்தில் அம்ம,
அறம்கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
உரைசால் வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அருங்கலம் ஏற்ப நீர்பட்டு -- 5
இருஞ்சேறு ஆடிய மணல்மலி முற்றத்துக்
களிறுநிலை முணைஇய தார்அரும் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே
எஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவி
அலங்கும் பாண்டில் இழைஅணிந்து ஈம்என -- 10
ஆனாக் கொள்கையை ஆதலின் அவ்வயின்
மாஇரு விசும்பின் பன்மீன் ஒளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
உறுமுரண் சிதைத்தநின் நோன்தாள் வாழ்த்திக்
காண்கு வந்திசின், கழல்தொடி அண்ணல்! -- 15
மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்
இதழ்வனப்பு உற்ற தோற்றமொடு உயர்ந்த
மழையினும் பெரும்பயம் பொழிதி அதனால்
பசியுடை ஒக்கலை ஒரீஇய
இசைமேந் தோன்றல்நின் பாசறை யானே. -- 20

துறை - காட்சி வாழ்த்து
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - உரைசால் வேள்வி

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com