garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பதிற்றுப்பத்து --> ஏழாம் பத்து பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                            
ஏழாம் பத்து
ஆசிரியர்: கபிலர்
65. நாள் மகிழ் இருக்கை

எறிபிணம் இடறிய செம்மறுக் குளம்பின்
பரியுடை நன்மா வரியுளை சூட்டி
மலைத்த தெவ்வர் மறம்தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வில்லோர் மெய்ம்மறை! சேர்ந்தோர் செல்வ! -- 5
பூண்அணிந்து எழிலிய வனைந்துவரல இளமுலை
மாண்வரி அல்குல் மலர்ந்த நோக்கின்
வேய்புரைபு எழிலிய விளங்குஇறைப் பணைத்தோள்
காமர் கடவுளும் ஆளும் கற்பின்
சேண்நாறு நறுநுதல் சேயிழை கணவ! -- 10
பாணர் புரவல, பரிசிலர் வெறுக்கை,
பூண் அணிந்து விளங்கிய புகழ்சால் மார்ப, நின்
நாள்மகிழ் இருக்கை இனிதுகண் டிகுமே!
தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்குச் -- 15
சேறுசெய் மாரியின் அளிக்கும்நின்
சாறுபடு திருவின் நனைமகி ழானே.

துறை - பரிசில் துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - நாள்மகிழ் இருக்கை

66. புதல் சூழ் பறவை

வாங்குஇரு மருப்பின் தீந்தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணிப்
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல,
இடிஇசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார்
வேலுடைக் குழூஉச்சமம் ததைய நூறிக் -- 5
கொன்றுபுறம் பெற்ற பிணம்பயில் அழுவத்துத்
தொன்றுதிறை தந்த களிற்றொடு நெல்லின்
அம்பண அளவை விரிந்துஉறை போகிய
ஆர்பதம் நல்கும் என்ப; கறுத்தோர்
உறுமுரண் தாங்கிய தார்அருந் தகைப்பின், -- 10
நாள்மழைக் குழூஉச்சிமை கடுக்கும் தோன்றல்
தோல்மிசைத்து எழுதரும் விரிந்துஇலங்கு எஃகின்
தார்புரிந் தன்ன வாளுடை விழவின்
போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகைத் துய்வீ ஏய்ப்பப் -- 15
பூத்த முல்லைப் புதல்சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் தொடைக்குலைச் சேக்கும்
வான்பளிங்கு விரைஇய செம்பரல் முரம்பின்
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே. -- 20

துறை - செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - புதல்சூழ் பறவை

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com