garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பதிற்றுப்பத்து --> ஏழாம் பத்து பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                            
ஏழாம் பத்து
ஆசிரியர்: கபிலர்
69. மண் கெழு ஞாலம்

மலைஉறழ் யானை வான்தோய் வெல்கொடி
வரைமிசை அருவியின் வயின்வயின் நுடங்கக்
கடல்போல் தானைக் கடுங்குரல் முரசம்
கால்உறு கடலின் கடிய உரற
எறிந்து சிதைந்த வாள் -- 5
இலைதெரிந்த வேல்
பாய்ந்துஆய்ந்த மா
ஆய்ந்துதெரிந்த புகல்மறவரொடு
படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்
கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே! -- 10
நின்போல், அசைவில் கொள்கையர் ஆதலின், அசையாது
ஆண்டோர் மன்றஇம் மண்கெழு ஞாலம்
நிலம்பயம் பொழியச் சுடர்சினம் தணியப்
பயம்கெழு வெள்ளி ஆநியம் நிற்ப
விசும்புமெய் அகலப் பெயல்புரவு எதிர -- 15
நால்வேறு நனந்தலை ஓராங்கு நந்த
இலங்கு கதிர்த் திகிரி முந்திசி னோரே.

துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம் - ஒழுகுவண்ணம் - சொற்சீர் வண்ணமும்
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் - மண் கெழு ஞாலம்

70. பறைக் குரல் அருவி

களிறுகடைஇய தாள்
மாஉடற்றிய வடிம்பு
சமம்ததைந்த வேல்
கல்அலைத்த தோள்
வில்அலைத்த நல்வலத்து -- 5
வண்டுஇசை கடாவாத் தண்பனம் போந்தைக்
குவிமுகிழ் ஊசி வெண்தோடு கொண்டு
தீம்சுனை நீர்மலர் மலைந்து மதம்செருக்கி
உடைநிலை நல்லமர் கடந்து மறம்கெடுத்துக்
கடுஞ்சின வேந்தர் செம்மல் தொலைத்த -- 10
வலம்படு வான்கழல் வயவர் பெரும!
நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
புறஞ்சொல் கேளாப் புரைதீர் ஒண்மைப்
பெண்மை சான்று பெருமடம் நிலைஇக்
கற்புஇறை கொண்ட கமழும் சுடர்நுதல் -- 15
புரையோள் கணவ! பூண்கிளர் மார்ப!
தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற
வேள்வியில் கடவுள் அருத்தினை; கேள்வி
உயர்நிலை உலகத்து ஐயர்இன் புறுத்தினை;
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை -- 20
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்
மாடோர் உறையும் உலகழும் கேட்ப
இழும்என இழிதரும் பறைக்குரல் அருவி
முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும் -- 25
அயிரை நெடுவரை போலத்
தொலையா தாகநீ வாழும் நாளே.

துறை - செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித் தூக்கும்
பெயர் - பறைக் குரல் அருவி

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com