garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பதிற்றுப்பத்து --> ஏழாம் பத்து பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                            
ஏழாம் பத்து
ஆசிரியர்: கபிலர்
61. புலா அம் பாசறை

பலாஅம் பழுத்த பசும்புண் அரியல்
வாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல்,
ஒவத்து அன்ன வினைபுனை நல்லில்
பாவை அன்ன நல்லோள் கணவன்
பொன்னின் அன்ன பூவின் சிறியிலைப் -- 5
புன்கால் உன்னத்துப் பகைவன், எம்கோ,
புலர்ந்த சாந்தின் புலரா ஈகை,
மலர்ந்த மார்பின் மாவண் பாரி,
முழவுமண் புலர இரவலர் இனைய
வாராச் சேண்புலம் படர்ந்தோன், அளிக்கென -- 10
இரக்கு வாரேன், எஞ்சிக் கூறேன்;
ஈத்தது இரங்கான் ஈத்தொறும் மகிழான்
ஈத்தொறும் மாவள் ளியன்என நுவலும்நின்
நல்லிசை தரவந் திசினே; ஒள்வாள்
உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை, -- 15
நிலவின் அன்ன வெள்வேல் பாடினி
முழவின் போக்கிய வெண்கை
விழவின் அன்னநின் கலிமகி ழானே.

துறை - காட்சி வாழ்த்து
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - புலாஅம் பாசறை

62. வரைபோல் இஞ்சி

இழைஅணிந்து எழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு
மழைஎன மருளும் மாஇரும் பல்தோல்
எஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவியொடு
மைந்துடை ஆர்எயில் புடைபட வளைஇ
வந்துபுறத்து இறுக்கும் பசும்பிசிர் ஒள்அழல் -- 5
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்பு
ஒல்லா மயலொடு பாடுஇமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்
துப்புத்துறை போகிய கொற்ற வேந்தே!
புனல்பொரு கிடங்கின் வரைபோல் இஞ்சி -- 10
அணங்குடைத் தடக்கையர் தோட்டி செப்பிப்
பணிந்துதிறை தருபநின் பகைவர் ஆயின்,
புல்லுடை வியன்புலம் பல்ஆ பரப்பி
வளனுடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த
களன்அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி -- 15
அரியல் ஆர்கை வன்கை வினைநர்
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்
ஆடுசிறை வரிவண்டு ஓப்பும்
பாடல் சான்றஅவர் அகன்தலை நாடே.

துறை - செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் - ஒழுகுவண்ணம்
தூக்கு - செந்தூக்கு
பெயர் - வரைபோல் இஞ்சி

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com