garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> களிற்றியானை நிரை பகுதி - 1
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
1. தலைவி கூற்று

வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல்,
உருவக் குதிரை மழவர் ஒட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய (5)
கல்போல் பிரியலம் என்ற சொல்தாம்
மறந்தனர் கொல்லோ, தோழி சிறந்த
வேய்மருள் பணைத்தோள் நெகிழ, சேய்நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார், நிலம்பக
அழல்போல் வெங்கதிர் பைதுஅறத் தெறுதலின், (10)
நிழல்தேய்ந்து உலறிய மரத்த, அறைகாய்பு,
அறுநீர்ப் பைஞ்சுனை ஆம்அறப் புலர்தலின்,
உகுநெல் பொரியும் வெம்மைய, யாவரும்
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய,
சுரம்புல் என்ற ஆற்ற, அலங்குசினை (15)
நார்இல் முருங்கை நவிரல் வான்பூச்
சூரல்அம் கடுவளி எடுப்ப, ஆர்உற்று
உடைதிரைப் பிதிர்வின் பொங்கிமுன்
கடல்போல் தோன்றல, காடுஇறந் தோரே.

திணை - பாலை
இயற்றியவர் - மாமூலனார்

2. தோழி கூற்று

கோழ்இலை வாழைக் கோள்மிகு பெருங்குலை
ஊழ்உறு தீங்கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு, ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது (5)
கறிவளர் சாந்தம் ஏறல்செல் லாது,
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும்
குறியா இன்பம், எளிதின் நின்மலைப்
பல்வேறு விலங்கும் எய்தும் நாட
குறித்த இன்பம் நினக்குஎவன் அரிய? (10)
வெறுத்த ஏஎர், வேய்புரை பணைத்தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும் இனையள் ஆயின், தந்தை
அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றி,
கங்குல் வருதலும் உரியை, பைம்புதல் (15)
வேங்கையும் ஒள்இணர் விரிந்தன,
நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே.

திணை - குறிஞ்சி
இயற்றியவர் - கபிலர்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com