garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> களிற்றியானை நிரை பகுதி - 2
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
61. தோழி கூற்று

நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோள்உற விளியார், பிறர் கொளவிளிந் தோர்எனத்
தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்
நாள்இழை நெடுஞ்சுவர் நோக்கி, நோய்உழந்து
ஆழல் வாழி, தோழி தாழாது, (5)
உரும்எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ,
அருநிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு,
நறவுநொடை நெல்லின் நாள்மகிழ் அயரும் (10)
கழல்புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
பழகுவர் ஆதலோ அரிதே முனாஅது
முழவுஉறழ் திணிதோள் நெடுவேள் ஆவி (15)
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின்
ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த
நுண்பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.

திணை - பாலை
இயற்றியவர் - மாமூலனார்

62. தலைவன் கூற்று

அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப்பொலிந்து இலங்கும் எயிறுகெழு துவர்வாய்,
ஆகத்து அரும்பிய முலையள், பணைத்தோள்,
மாத்தாள் குவளை மலர்பிணைத்து அன்ன
மாஇதழ் மழைக்கண், மாஅ யோளொடு (5)
பேயும் அறியா மறைஅமை புணர்ச்சி
பூசல் துடியின் புணர்புபிரிந்து இசைப்பக்
கரந்த கரப்பொடு நாம்செலற்கு அருமையின்,
கடும்புனல் மலிந்த காவிரிப் பேர்யாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல, (10)
நடுங்குஅஞர் தீர முயங்கி, நெருதல்
ஆகம் அடைதந் தோளே வென்வேல்
களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறுநீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவையின், (15)
மடவது மாண்ட மாஅ யோளே.

திணை -
இயற்றியவர் - பரணர்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com