garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> களிற்றியானை நிரை பகுதி - 2
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
65. தோழி கூற்று

உன்னம் கொள்கையொடு உளம்கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம், என்னதூஉம்
ஈரம் சோரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்,
நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற் (5)
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவஇனி வாழி, தோழி! அவரே,
பொம்மல் ஓதி நம்மொடு ஓராங்குச்
செலவுஅயர்ந் தனரால் இன்றே மலைதொறும்
மால்கழை பிசைந்த கால்வாய் கூர்எரி (10)
மீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர்
வான்தோய் புணரி மிசைக்கண் டாங்கு,
மேவரத் தோன்றும் யாஅஉயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச்சென் றன்ன
கல்ஊர்பு இழிதரும் புல்சாய் சிறுநெறிக் (15)
காடுமீக் கூறும் கோடுஏந்து ஒருத்தல்
ஆறுகடி கொள்ளும் அருஞ்சுரம், பணைத்தோள்
நாறுஐங் கூந்தல், கொம்மை வரிமுலை,
நிரைஇதழ் உண்கண், மகளிர்க்கு
அரிய வால்என அழுங்கிய செலவே (20)

திணை - பாலை
இயற்றியவர் - மாமூலனார்

66. தலைவி கூற்று

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுஇன்று எய்துப,
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்ம லோர்எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் (5)
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி?
நிரைதார் மார்பன் நெருதல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின்
இயன்ற அணியன், இத்தெரு இறப்போன்
மாண்தொழில் மாமணி கறங்க, கடைகழிந்து, (10)
காண்டல் விருப்பொடு தளர்புதளர்பு ஓடும்
பூங்கண் புதல்வனை நோக்கி, நெடுந்தேர்
தாங்குமதி, வலவஎன்று இழிந்தனன் தாங்காது,
மணிபுரை செவ்வாய் மார்பகம் சிவணப்
புல்லி, பெரும செல்இனி, அகத்துஎனக் (15)
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்ம்என மகனொடு
தானே புகுதந் தோனே யான்அது
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து, இவன்
கலக்கினன் போலும்இக் கொடியோன் எனச்சென்று (20)
அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு
இமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனைப்
பயிர்வன போல்வந்து இசைப்பவும், தவிரான்,
கழங்குஆடு ஆயத்து அன்றுநம் அருளிய
பழங்கண் ணோட்டமும் நலிய, (25)
அழுங்கினன் அல்லனோ, அயர்ந்ததன் மணனே.

திணை - மருதம்
இயற்றியவர் - செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com