garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> களிற்றியானை நிரை பகுதி - 2
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
67. தலைவி கூற்று

யான்எவன் செய்கோ? தோழி பொறிவரி
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது
உறைதுறந்து எழிலி நீங்கலின், பறைபுஉடன்,
மரம்புல் லென்ற முரம்புஉயர் நனந்தலை,
அரம்போழ் நுதிய வாளி அம்பின் (5)
நிரம்பா நோக்கின், நிரையம் கொண்மார்,
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
நல்அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் (10)
வேல்ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தருமார், மன்னர்
கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன
உவல்இடு பதுக்கை ஆள்உகு பறந்தலை,
உருஇல் பேஎய் ஊராத் தேரொடு (15)
நிலம்படு மின்மினி போல, பலஉடன்
இலங்குபரல் இமைக்கும் என்பநம்
நலம்துறந்து உறைநர் சென்ற ஆறே.

திணை - பாலை
இயற்றியவர் - நோய்பாடியார்

68. தோழி கூற்று

அன்னாய் வாழி, வேண்டு அன்னைநம் படப்பைத்
தண்அயத்து அமன்ற கூதளம் குழைய,
இன்இசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ? வாழி, வேண்டுஅன்னை நம்படப்பை
ஊட்டி யன்ன ஒண்தளிர்ச் செயலை (5)
ஓங்குசினைத் தொடுத்த ஊசல், பாம்புஎன,
முழுமுதல் துமிய உரும்எறிந் தன்றே,
பின்னும் கேட்டியோ? எனவும் அஃது அறியாள்,
அன்னையும் கனைதுயில் மடிந்தனள், அதன்தலை
மன்உயிர் மடிந்தன்றால் பொழுதே, காதலர் (10)
வருவர் ஆயின் பருவம் இதுஎனச்
சுடர்ந்துஇலங்கு எல்வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுதுஅன் றாக,
வந்தனர் வாழி, தோழி அந்தரத்து
இமிழ்பெயல் தலைஇய இனப்பல கொண்மூத் (15)
தவிர்வுஇல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப,
கன்றுகால் ஒய்யும் கடுஞ்சுழி நீத்தம்
புன்தலை மடப்பிடி பூசல் பலஉடன்
வெண்கோட்டு யானை விளிபடத் துழவும்
அகல்வாய்ப் பாந்தள் படாஅர்ப் (20)
பகலும் அஞ்சும் பனிக்கடுஞ் சுரனே.

திணை - குறிஞ்சி
இயற்றியவர் - ஊட்டியார்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com