garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> களிற்றியானை நிரை பகுதி - 2
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
43. தலைவன் கூற்று

கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை,
சுடர்நிமிர் மின்னொடு வலன்ஏர்பு, இரங்கி,
என்றூழ் உழந்த புன்தலை மடப்பிடி
கைமாய் நீத்தம் களிற்றொடு படீஇய;
நிலனும் விசும்பும் நீர்இயைந்து ஒன்றி, (5)
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர்மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
தளிமயங் கின்றே தண்குரல் எழிலி, யாமே
கொய்அகை முல்லை காலொடு மயங்கி,
மைஇருங் கானம் நாறும் நறுநுதல், (10)
பல்இருங் கூந்தல் மெல்இயல் மடந்தை
நல்எழில் ஆகம் சேர்ந்தனம், என்றும்
அளியரோ அளியர் தாமே - அளிஇன்று
ஏதில் பொருட்பிணிப் போகி, தம்
இன்துணைப் பிரியும் மடமை யோரே

திணை - பாலை
இயற்றியவர் - மதுரையாசிரியர் நல்லந்துவனார்

44. தலைவன் கூற்று

வந்துவினை முடித்தனன் வேந்தனும், பகைவரும்
தம்திறை கொடுத்துத் தமர்ஆ யினரே,
முரண்செறிந் திருந்த தானை இரண்டும்
ஒன்றுஎன அறைந்தன பணையே, நின்தேர்
முன்இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது, (5)
ஊர்க, பாக ஒருவினை, கழிய
நன்னன், ஏற்றை நறும்பூண் அத்தி,
துன் அருங் கடுந்திறல் கங்கன், கட்டி,
பொன்அணி வல்வில் புன்றுறை, என்றுஆங்கு
அன்றுஅவர் குழீஇய அளப்புஅருங் கட்டூர், (10)
பருந்துபடப் பண்ணி, பழையன் பட்டென,
கண்டது நோனான் ஆகி, திண்தேர்க்
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
பிணஅல்அம் கண்ணிப் பெரும்பூட் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர், (15)
பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளை,
தண்குட வாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன்துயில் பெறவே

திணை - முல்லை
இயற்றியவர் - குடவாயில் கீரத்தனார்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com