garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> களிற்றியானை நிரை பகுதி - 2
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
49. செவிலி கூற்று

கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
முன்நாள் போலாள், இறீஇயர், என்உயிர்என,
கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
கடுங்கட் கறவையின் சிறுபுறம் நோக்கி, (5)
குறுக வந்து குவவுநுதல் நீவி,
மெல்லெனத் தழீஇனேன் ஆக, என்மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
பல்கால் முயங்கினள் மன்னே, அன்னோ
விறல்மிகு நெடுந்தகை பலபா ராட்டி, (10)
வறன்நிழல் அசைஇ, வான்புலந்து வருந்திய
மடமான் அசாஇனம், திரங்குமரல் சுவைக்கும்
காடுஉடன் கழிதல் அறியின் தந்தை
அல்குபதம் மிகுந்த கடியுடை வியல்நகர்,
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, (15)
கோதை ஆயமொடு ஓரை தழீஇ,
தோடுஅமை அரிச்சிலம்பு ஒலிப்ப,அவள்
ஆடுவழி ஆடுவழி, அகலேன் மன்னே.

திணை - பாலை
இயற்றியவர் - வண்ணப்புறக் கந்தரத்தனார்

50. தோழி கூற்று

கடல்பாடு அவிந்து தோணி நீங்கி
நெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்,
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்,
மாண்இழை நெடுந்தேர் பாணி நிற்ப,
பகலும் நும்வயின் அகலா னாகிப் (5)
பயின்றுவரும் மன்னே, பனிநீர்ச் சேர்ப்பன்
இனியே, மணப்பருங் காமம் தணப்பநீந்தி
வாராதோர் நமக்கு யாஅர்? என்னாது
மல்லல் மூதூர் மறையினை சென்று
சொல்லின் எவனோ பாண எல்லி (10)
மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில்,
துணைஒன்று பிரியினும் துஞ்சா காண்என,
கண்நிறை நீர்கொடு கரக்கும்
ஒண்நுதல் அரிவை, யான் என்செய்கோ எனவே.

திணை - நெய்தல்
இயற்றியவர் - கருவூர்ப் பூதஞ் சாத்தனார்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com