garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> களிற்றியானை நிரை பகுதி - 2
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
51. தலைமகள் கூற்று

ஆள்வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர்தெற,
நீள்எரி பரந்த நெடுந்தாள் யாத்து,
போழ்வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
முடைநசை இருக்கைப் பெடைமுகம் நோக்கி,
ஊன்பதித் தன்ன வெருவரு செஞ்செவி (5)
எருவைச் சேவல் கரிபுசிறை தீய,
வேனில் நீடிய வேய்உயர் நனந்தலை,
நீஉழந்து எய்தும் செய்வினைப் பொருட்பிணி
பல்இதழ் மழைக்கண் மாஅ யோள்வயின்
பிரியின் புணர்வது ஆயின், பிரியாது, (10)
ஏந்துமுலை முற்றம் வீங்க, பல்ஊழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப,
நினைமாண் நெஞ்சம்நீங்குதல் மறந்தே.

திணை - பாலை
இயற்றியவர் - பெருந்தேவனார்

52. தலைவி கூற்று

வலந்த வள்ளி மரன்ஓங்கு சாரல்,
கிளர்ந்த வேங்கைச் சேண்நெடும் பொங்கர்ப்
பொன்நேர் புதுமலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
ஏகல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் (5)
ஆகொள் வயப்புலி ஆகும்அஃது எனத்தம்
மலைகெழு சீறூர் புலம்ப, கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சுஅமர் வியல்மார்பு உடைத்துஎன அன்னைக்கு
அறிவிப் பேம்கொல்? அறிவியேம் கொல்? என (10)
இருபால் பட்ட சூழ்ச்சி ஒருபால்
சேர்ந்தன்று வாழி, தோழி யாக்கை
இன்உயிர் கழிவது ஆயினும், நின்மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோய்எனச் செப்பா தீமே. (15)

திணை - குறிஞ்சி
இயற்றியவர் - நொச்சி நியமங்கிழார்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com