garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> களிற்றியானை நிரை பகுதி - 2
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
41. தலைவன் கூற்று

வைகுபுலர் விடியல், மைபுலம் பரப்பக்
கருநனை அவிழ்ந்த ஊழ்உறு முருக்கின்
எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப,
நெடுநெல் அடைச்சிய கழனிஏர் புகுத்துக்
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, (5)
அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்
ஓதைத் தெள்விளி புலம்தொறும் பரப்ப,
கோழ்இணர் எதிரிய மரத்த, கவினி,
காடுஅணி கொண்ட காண்தகு பொழுதில்,
நாம்பிரி புலம்பின் நலம்செலச் சாஅய், (10)
நம்பிரிபு அறியா நலனொடு சிறந்த
நல்தோள் நெகிழ, வருந்தினள் கொல்லோ
மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்
தாதுஇன் துவலை தளிர்வார்த் தன்ன
அம்கலுழ் மாமை கிளைஇய (15)
நுண்பல் தித்தி மாஅ யோளே?

திணை - பாலை
இயற்றியவர் - குன்றியனார்

42. தோழி கூற்று

மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல்அரு நிலைஇய பெயல்ஏர் மணமுகைச்
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்
தளிர்ஏர் மேனி, மாஅ யோயே
நாடு வறம்கூர, நாஞ்சில் துஞ்சக் (5)
கோடை நீடிய பைதுஅறு காலை
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்றுசேக் கல்லாப் புள்ள, உள்இல்,
என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப்
பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறைப் (10)
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந் தற்றே சேண்இடை
ஓங்கித் தோன்றும் உயர்வரை
வான்தோய் வெற்பன் வந்த மாறே.

திணை - குறிஞ்சி
இயற்றியவர் - கபிலர்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com