garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> களிற்றியானை நிரை பகுதி - 3
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
81. தோழி கூற்று

நாள்உலா எழுந்த கோள்வல் உளியம்
ஓங்குசினை இருப்பைத் தீம்பழம் முனையின்
புல்அளைப் புற்றின் பல்கிளைச் சிதலை
ஒருங்குமுயன்று எடுத்த நனைவாய் நெடுங்கோடு
இரும்புஊது குருகின், இடந்து, இரை தேரும் (5)
மண்பக வறந்த ஆங்கண், கண்பொரக்
கதிர்தெற, கவிழ்ந்த உலறுதலை நோன்சினை
நெறிஅயல் மராஅம் ஏறி, புலம்புகொள
எறிபருந்து உயவும் என்றூழ் நீள்இடை
வெம்முனை அருஞ்சுரம் நீந்திச் சிறந்த (10)
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும்
மாவண் கடலன் விளங்கில் அன்ன, எம்
மைஎழில் உண்கண் கலுழ
ஐய சேறிரோ, அகன்றுசெய் பொருட்கே? (15)

திணை - பாலை
இயற்றியவர் - ஆலம் பேரி சாத்தனார்

82. தலைவி கூற்று

ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை ஆகப்
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்இசைத்
தோடுஅமை முழவின் துதைகுரல் ஆகக்
கணக்கலை இகுக்கும் கடுங்குரற் தூம்பொடு, (5)
மலைப்பூஞ் சாரல் வண்டுயாழ் ஆக,
இன்பல் இமிழ்இசை கேட்டுக் கலிசிறந்து,
மந்தி நல்அவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத்து, இயலிஆ டும்மயில்
நனவுப்புகு விறலியில் தோன்றும் நாடன் (10)
உருவ வல்வில் பற்றி, அம்புதெரிந்து,
செருச்செய் யானை செல்நெறி வினாஅய்,
புலர்குரல் ஏனற் புழையுடை ஒருசிறை,
மலர்தார் மார்பன், நின்றோற் கண்டோர்
பலர்தில், வாழி தோழி அவருள், (15)
ஆர்இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர்யான் ஆகுவது எவன்கொல்,
நீர்வார் கண்ணொடு, நெகிழ்தோ ளேனே?

திணை - குறிஞ்சி
இயற்றியவர் - கபிலர்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com