garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு
அகநானூறு

சங்க இலக்கியங்களில் பலராலும் எல்லாக் காலங்களிலும் கேட்டும் கற்றும் வரும் இலக்கியத்தில் தலையாயது "அகநானூறு" என்றால் அது மிகையன்று. நம்முன்னோர் நல்லோரா நம்மைப்போல் காதல், வீரம், அன்பு, தியாகம் நாட்டின்மீது பற்று என எப்படி அவர்களது உணர்வு இருந்தது என்ற அகம் பற்றிய வெளிப்பாடே இவ்விலக்கியமாகும்.

நானூறு பாடல்கள் பல்வேறுப் புலவர்களால் பல்வேறு புலவர்களால் பல்வேறு சங்க காலத்தைச் சார்ந்தவர்கள் பாடப்பட்டிருந்தாலும் மறவர் தமிழர் பண்பால் ஒன்றுபட்டவர் என்பதை இப்பாடல்கள் நமக்குப் புரிய வைக்கின்றது.

குறுந்தொகை, நற்றினை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய நூல்களும் அகம் பற்றிய நூல்களேயாயினும் அகநானூறு நீண்டப் பாடல்களைக் கொண்டதால் இதனை "நெடுந்தொகை" நூல் என்றும் கூறுவர்.

"சிவபெருமானைப் பற்றி பாரதம்" பாடிய பெருந்தேவனார் அகநானூறிலும் கடவுள் வாழ்த்தும் பாடியுள்ளார் ஏனைய பாடல்கள் 400–ம் கடவுள் வாழ்த்தும் ஒன்றும் சேர்த்து 401 பாடல்களைக் கொண்ட இந்நூல் மற்றொரு சிறப்பிற்கும் உரியது.

திணை வகையில் எளிதில் பிரிக்கக் கூடிய சிறப்புக்கொண்ட இந்நூல் ஒற்றைப்படை எண்கள் கொண்டப் பாடல்கள் "பாலைத்திணையிலும்" இரட்டைப்படை எண்கள் வகையில் உள்ளப் பாடல்கள் "குறிஞ்சித் திணையிலும்" 4–ஆம் எண்ணின் வரிசையில் அமைந்த 40 பாடல்கள் "முல்லைத் திணையிலும்" மற்றும் 6–ம் எண்ணின் வரிசைப்பாடல்கள் 40 "மருதம் திணையிலும்" உள்ளது. எஞ்சியப் பாடல்கள் 10–ஆம் எண்ணின் வரிசையில் உள்ள 40 பாடல்களும் "நெய்தல் திணை"யைச் சார்ந்தவை.

அகநானூற்றில் உள்ள பாடல்களை 1 முதல் 120 பாடல்களை களிற்றியானை நிரை என்றும் 121 முதல் 300 பாடல்களை மணிமிடைப்பவளம் என்றும் 301 முதல் 400 வரை உள்ள பாடல்கள் நித்திலக்கோவை என மூன்று பகுப்புகளாகப் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு பாடிய 145 புலவர்களில் அகநானூறில் மட்டுமே பாடியவர்கள் 65 புலவர்கள். இப்புலவர்கள் பல்வேறு துறைப் பணிகளைச் செய்து வந்தவர்கள் என்பது நமக்கு செவிவழிச் செய்தியாகும். உதாரணமாக அரசரும் அந்தணரும் வணிகர் என்ன அனைவரும் புலமைப் பெற்றிருந்த வரலாறு பாரதியின் கூற்றை நினைவுப்படுத்துகின்றது.

தலைவன் தான் மணக்கப்போகும் பெண்ணிற்கு பரிசம் தந்து மணக்கும் பண்பாடும் இந்நூலில் வெளிப்படுகின்றது.

தலைவன் தான் விரும்பிய பெண்ணிடம் தன் காதலை தெரிவித்து அவள் ஏற்றவுடன் அவளை பிரிந்து பொருள் ஈட்ட சென்ற கதைகளை அறிந்திருப் போம் ஆனால் அவ்வாறு சென்றதன் நோக்கம் தானே உழைத்து பொருள் ஈட்டிவந்து பரிசம் தந்து காதலியை மணப்பதற்காக உதாரணமாக தானே வேட்டையாடிய புலியின் பல்லை எடுத்து தாலிசெய்து காதலிக்கு அணிவித்த கதையும் அகநானூறில் உண்டு.

வாழ்விற்கு பொருள்தேவை எனவே அதனை ஈட்டி உன்னைப் பிரிந்து செல்ல வேண்டியுள்ளது குறித்து தலைவன்
"கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்
கேள்அல் கேளிர் கெழீ இயினர் ஒழுகவும்
ஆள்வினைக் கெதிரிய ஊக்கமொடு புகல்சிறந்து"

என்று தலைவனின் பிரிவிற்கான உயரிய நோக்கத்தை வெளிப்படுத்த தலைவனின் பிரிவால் வருந்தினாலும் அலகை செயலிற்கு உறுதுணையாக இருப்பதை

"நம் நயந்து உறைவோர்த் தாங்கித் தம் நயந்து
இன்னமர் கேளிரோடு ஒழுறக் கெழீஇ
நகுதல் ஆற்றார் நல் கூர்ந்தோர் என"
பாடுவதிலிருந்து அறியலாம்.

மதுரை உப்பூரிகுடி கிழார் மகன் உருத்திரன்சன்மர் மன்னன் பாண்டியன் உத்திரப்பெருவழுதி ஆட்சியில் தொகுத்தார் என்று குறிக்கப்பட்டுள்ளது.

வே. இராசகோபாலாச்சாரியார் அகநானூறில் ஒன்று முதல் எழுபது பாடல்களுக்கு உரையெழுதிய பெருமையும் நமக்குண்டு.

களிற்றியானை நிரை

மணிமிடைப்பவளம்

நித்திலக்கோவை

கடவுள் வாழ்த்து
காவிரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
தாரன், மாலையன், மலைந்த கண்ணியன்,
மார்பி னஃதே. மைஇல் நுண்ஞாண்,
நுதலது இமையாநாட்டம், இகல்அட்டுக்
கையது கணிச்சியொடு மழுவே, மூவாய்
வேலும் உண்டுஅத் தோலே தோற்கே,
ஊர்ந்தது ஏறே, சேர்ந்தோள் உமையே,
செவ்வான் அன்ன மேனி, அவ்வான்
இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிற்று,
எரிஅகைந் தன்ன அவிர்ந்து விளங்கு புரிசிடை,
முதிராத் திங்காடு சுடரும் சென்னி,
மூவா அமரரும், முனிவரும், பிறரும்,
யாவரும் அறியாத் தொன்முறை மரபின்
வரிகிளர் வயமான் உரிவை தைஇய
யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்,
தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே.

திணை– பாடாண் இயற்றியவர்– பாரதம் பாடிய பெருங்கடுங்கோ.

garuda e learning websites, free tamil old website
 
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com