garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> மணிமிடைப்பவளம் பகுதி - 1
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
121. தலைவன் கூற்று

நாம்நகை யுடையம் நெஞ்சே கடுந்தெறல்
வேனில் நீடிய வான்உயர் வழிநாள்,
வறுமை கூரிய மண்நீர்ச் சிறுகுளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணி, (5)
சேறுகொண்டு ஆடிய வேறுபாடு வயக்களிறு
செங்கோல் வால்இணர் தயங்கத் தீண்டி,
சொரிபுறம் உரிஞிய நெறிஅயல் மராஅத்து
அல்குறு வரிநிழல் அசைஇ, நம்மொடு
தான்வரும் என்ப, தடமென் தோளி (10)
உறுகண் மழவர் உருள்கீண் டிட்ட
ஆறுசெல் மாக்கள் சோறுபொதி வெண்குடை,
கனைவிசைக் கடுவளி எடுத்தலின், துணைசெத்து
வெருள்ஏறு பயிரும் ஆங்கண்,
கருமுக முசுவின் கானத் தானே. (15)

திணை - பாலை
இயற்றியவர் - மதுரை மருதன் இளநாகனார்

122. தலைமகள் கூற்று

இரும்பிழி மாரி அழுங்கல் மூதூர்
விழவுஇன்று ஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவணம் மறுகுஉடன் மடியின்,
வல்உரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்;
பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்; (5)
துஞ்சாக் கண்ணா காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வைஎயிற்று
வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்,
அரவவாய் ஞமலி மகிழாது மடியின்,
பகல்உரு உறழ நிலவுக்கான்று விசும்பின் (10)
அகல்வாய் மண்டிலம் நின்றுவரி யும்மே;
திங்கள் கல்சேர்பு கனைஇருள் மடியின்,
இல்எலி வல்சி வல்வாய்க் கூகை
கழுதுவழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
வளைக்கண் சேவல் வாளாது மடியின்; (15)
மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்த காலை, ஒருநாள்
நில்லா நெஞ்சத்து அவர்வா ரலரே, அதனால்
அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து,
ஆதி போகிய பாய்பரி நன்மான் (20)
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல்முதிர் புறங்காட்டு அன்ன
பல்முட்டின்றால் தோழிநம் களவே

திணை - பாலை
இயற்றியவர் - பரணர்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com