garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> மணிமிடைப்பவளம் பகுதி - 2
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
161. தோழி கூற்று

வினைவயின் பிரிதல் யாவது? வணர்சுரி
வடியாப் பித்தை, வன்கண் ஆடவர்
அடிஅமை பகழி ஆர வாங்கி,
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை,
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி -- 5
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து
இறப்ப எண்ணினர் என்பது சிறப்பக்
கேட்டனள் கொல்லோ தானே? தோள்தாழ்பு
சுரும்பு உண ஒலிவரும் இரும்பல் கூந்தல், -- 10
அம்மா மேனி, ஆய்இழைக் குறுமகள்
சுணங்குசூழ் ஆகத்து அணங்குஎன உருத்த
நல்வரல் இளமுலை நனைய,
பல்இதழ் உண்கண் பரந்தன பனியே.

திணை - பாலை
இயற்றியவர் - மதுரைப் புல்லங் கண்ணனார்

162. தலைமகன் கூற்று

கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்து
அளப்புஅரிது ஆகிய குவைஇருந் தோன்றல,
கடல்கண் டன்ன மாக விசும்பின்
அழற்கொடி அன்ன மின்னுவசிபு நுடங்க,
கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி, (5)
விளிவுஇடன் அறியா வான்உழிழ் நடுநாள்,
அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி,
பனிமயங்கு அசைவளி அலைப்ப, தந்தை
நெடுநகர் ஒருசிறை நின்றனென் ஆக,
அறல்என அவிர்வரும் கூந்தல் மலர்என (10)
வாள்முகத்து அலமரும் மாஇதழ் மழைக்கண்,
முகைநிரைத்து அன்ன மாவீழ் வெண்பல்,
நகைமாண்டு இலங்கும் நலம்கெழு துவர்வாய்,
கோல்அமை விழுத்தொடி விளங்க வீசி,
கால்உறு தளிரின் நடுங்கி, ஆனாது, (15)
நோய்அசா வீட முயங்கினள் - வாய்மொழி
நல்இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
நசைபிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்
கோள்அறவு அறியாப் பயம்கெழு பலவின்
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, (20)
வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன்
களிறுஅணி வெல்கொடி கடுப்ப, காண்வர
ஒளிறுவன இழிதரும் உயர்ந்துதோன்று அருவி,
நேர்கொள் நெடுவரைக் கவா அன்
சூரர மகளிரின் பெறற்குஅரி யோளே. (25)

திணை - குறிஞ்சி
இயற்றியவர் - பரணர்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com