garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> மணிமிடைப்பவளம் பகுதி - 3
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
201. தோழி கூற்று

அம்ம! வாழி, தோழி! பொன்னின்
அவிர்எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை
வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன்
புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து -- 5
தழைஅணிப் பொலிந்த கோடுஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித்துறைப் பரவப்,
பகலோன் மறைந்த அந்தி ஆர்இடை,
உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு,
அலரும் மன்றுபட் டன்றே; அன்னையும் -- 10
பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும் என்று
எவன்கை யற்றனை இகுளை? சோழர்
வெண்ணெல் வைப்பின் நல்நாடு பெறினும்
ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅது
வான்புகு தலைய குன்றத்துக் கவாஅன், -- 15
பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
இருள்துணிந் தன்ன குவவுமயிர்க் குருளைத்
தோல்முலைப் பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன்இ றந்தோரே.

திணை - பாலை
இயற்றியவர் - மாமூலனார்

202. தோழி கூற்று

வயங்குவெள் அருவிய குன்றத்துக் கவாஅன்
கயந்தலை மடப்பிடி இனன்ஏ மார்ப்பப்
புலிப்பகை வென்ற புண்கூர் யானை
கல்லகச் சிலம்பில் கைஎடுத்து உயிர்ப்பின்
நல்இணர் வேங்கை நறுவீ கொல்லன் -- (5)
குருகுஊது மிதிஉலைப் பிதிர்வின் பொங்கிச்
சிறுபல் மின்மினி போலப் பலஉடன்
மணிநிற இரும்புதல் தாவும் நாட!
யாமே அன்றியும் உளர்கொல் பானாள்
உத்தி அரவின் பைத்தலை துமிய -- (10)
உரவுரும் உரறும் உட்குவரு நனந்தலை
தவிர்வுஇல் உள்ளமொடு எஃகு துணையாக
கனைஇருள் பரந்த கல்அதர்ச் சிறுநெறி
தேராது வரூஉம் நின்வயின்
ஆர்அஞர் அரும்படர் நீந்து வோரே. -- 15

திணை - குறிஞ்சி
இயற்றியவர் - ஆவூர் கிழார் மகனார் கண்ணகனார்.

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com