garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> மணிமிடைப்பவளம் பகுதி - 4
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
241. தலைமகள் கூற்று

துனிஇன்று இயைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம, அவர்என, முனியாது
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும்
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய
நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை -- (5)
மூங்கில் இளமுளை திரங்க, காம்பின்
கழைநரல் வியல்அகம் வெம்ப, மழைமறந்து
அருவி ஆன்ற வெருவரு நனந்தலைப்
பேஎய் வெண்தேர் பெயல்செத்து ஓடித்
தாஅம் பட்ட தனிமுதிர் பெருங்கலை -- (10)
புலம்பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை
விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்
வட்டக் கழங்கின் தாஅய், துய்த்தலைச்
செம்முக மந்தி ஆடும் -- (15)
நல்மர மருங்கின் மலைஇறந் தோரே.

திணை - பாலை
இயற்றியவர் – காவன் முல்லைப் பூதனார்.

242. தோழி கூற்று

அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச்
சுரும்புவாய் திறந்த பொன்புரை நுண்தாது
மணிமருள் கலவத்து உறைப்ப, அணிமிக்கு
அவிர்பொறி மஞ்ஞை ஆடும் சோலைப்
பைந்தாள் செந்தினைக் கொடுங்குரல் வியன்புனம் -- (5)
செந்தார்க் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்புதர வந்தமை அறியாள், 'நுண்கேழ்
முறிபுரை எழில்நலத்து என்மகள் துயர்மருங்கு
அறிதல் வேண்டும்' எனப் பல்பிரப்பு இரீஇ.
அறியா வேலற் தரீஇ, அன்னை -- (10)
வெறிஅயர் வியன்களம் பொலிய ஏத்தி
மறிஉயிர் வழங்கா அளவைச், சென்றுயாம்
செலவரத் துணிந்த, சேண்விளங்கு, எல்வளை
நெகிழ்ந்த முன்கை, நேர்இறைப் பணைத்தோள்
நல்எழில் அழிவின் தொல்கவின் பெறீஇய -- (15)
முகிழ்த்துவரல் இளமுலை மூழ்கப் பல்ஊழ்
முயங்கல் இயைவது மன்னோ, தோழி!
நறைகால் யாத்த நளிர்முகைச் சிலம்பில்
பெருமலை விடரகம் நீடிய, சிறியிலைச்
சாந்த மென்சினை தீண்டி, மேலது -- (20)
பிரசம் தூங்கும் சேண்சிமை
வரையக வெற்பன் மணந்த மார்பே.

திணை - குறிஞ்சி
இயற்றியவர் - பேரி சாத்தனார்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com