garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> மணிமிடைப்பவளம் பகுதி - 5
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                    
281. தலைமகள் கூற்று

செய்வது தெரிந்திசின் - தோழி! - அல்கலும்,
அகலுள் ஆங்கண் அச்சுஅறக் கூறிய
சொல்பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
ஒல்குஇயல் மடமயில் ஒழித்த பீலி,
வான்போழ் வல்வில் சுற்றி, நோன்சிலை -- (5)
அவ்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வுஇயல்
கனைகுரல் இசைக்கும் விரைசெலல் கடுங்கணை
முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து -- (10)
ஒண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறைஇறந்து அவரோ சென்றனர்
பறைஅறைந் தன்ன அலர்நமக்கு ஒழித்தே.

திணை - பாலை
இயற்றியவர் – மாமூலனார்.

282. தலைவி (அ) தலைவி கூற்று

பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய,
செறிமடை அம்பின், வல்வில் கானவன்
பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு,
நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்,
கண்பொருது இமைக்கும் திண்மணி கிளர்ப்ப -- (5)
வைந்நுதி வால்மருப்பு ஓடிய உக்க
தெண்நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு,
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு,
சாந்தம் பொறைமரம் ஆக, நறைநார்
வேங்கைக் கண்ணியன் இழிதரு நாடற்கு -- (10)
இன்தீம் பலவின் ஏர்கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன் கொடையே; அலர்வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்,
சாய்இறைத் திரண்ட தோள்பா ராட்டி,
யாயும், அவனே என்னும்; யாமும், -- (15)
வல்லே வருக வரைந்த நாள்என,
நல்இறை மெல்விரல் கூப்பி,
இல்உறை கடவுட்கு ஓக்குதும், பலியே.

திணை - குறிஞ்சி
இயற்றியவர் - தொல்கபிலர்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com