garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> நித்திலக்கோவை பகுதி - 1
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
301. தலைவி கூற்று

வறன்உறு செய்யின் வாடுபு வருந்தி,
படர்மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறுநனி ஆன்றிகம் என்றி - தோழி
நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு -- 5
நீர்வாழ் முதலை ஆவித் தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து
ஊர்இஃது என்னா, ஊறுஇல் வாழ்க்கை
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி,
பாடுஇன் தெண்கிணை கறங்க, காண்வர, -- 10
குவிஇணர் எருக்கின் ததர்பூங் கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப மகடூஉ
முளரித் தீயின் முழங்குஅழல் விளக்கத்து
களரி ஆவிரைக் களர்பூங் கோதை
வண்ண மார்பின் வனமுலைத் துயல்வர, -- 15
செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந்து இசைப்ப,
கார்வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மான, சீர்அமைத்து,
சில்அரி கறங்கும் சிறுபல் லியத்தொடு -- 20
பல்ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென,
தலைப்புணர்த்து அசைத்த பல்தொகைக் கலப்பையர்
இரும்பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன்தலை மன்றம் காணின், வழிநாள்
அழுங்கல் மூதூர்க்கு இன்னா தாகும்
அதுவே மருவினம் மாலை, அதனால்
காதலர் செய்த காதல் -- 25
நீடுஇன்று மறத்தல் கூடுமோ, மற்றே?

திணை - பாலை
இயற்றியவர் - அதியன் விண்ணத்தனார்

302. தோழி கூற்று

சிலம்பில் போகிய செம்முக வாழை
அலங்கல்அம் தோடு, அசைவளி உறுதொறும்
பள்ளி யானை பரூஉப்புறம் தைவரும்
நல்வரை நாடனொடு அருவி ஆடியும்
பல்இதழ் நீலம் படுசுனைக் குற்றும் -- (5)
நறுவீ வேங்கை இனவண்டு ஆர்க்கும்
வெறிகமழ் சோலை நயந்துவிளை யாடலும்
அரிய போலும் - காதலம் தோழி -
இருங்கல் அடுக்கத்து என்ஐயர் உழுத
கரும்புஎனக் கவினிய பெருங்குரல் ஏனல் -- (10)
கிளிபட விளைந்தமை அறிந்தும், செல்கஎன
நம்அவண் விடுநள் போலாள், கைம்மிகச்
சில்சுணங்கு அணிந்த, செறிந்துவீங்கு, இளமுலை
மெல்லியல் ஒலிவரும் கதுப்பொடு
பல்கால் நோக்கும் - அறன்இல் யாயே. -- (15)

திணை - குறிஞ்சி
இயற்றியவர் - மதுரை அறுவை வாணிகள் இள வேட்டனார்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com