garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> நித்திலக்கோவை பகுதி - 2
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
341. தலைவி கூற்று

உய்தகை இன்றால் தோழி பைபய,
கோங்கும் கொய்குழை உற்றன, குயிலும்
தேம்பாய் மாஅத்து ஓங்குசினை விளிக்கும்,
நாடுஆர் காவிரிக் கோடுதோய் மலிர்நிறைக்
கழைஅழி நீத்தம் சாஅய வழிநாள் -- 5
மழைகழிந் தன்ன மாக்கால் மயங்குஅறல்,
பதவுமேயல் அருந்து துளங்குஇமில் நல்ஏறும்,
மதவுடை நாக்கொடு அசைவீடப் பருகி,
குறுங்கால் காஞ்சிக் கோதை மெல்இணர்ப்
பொன்தகை நுண்தாது உறைப்ப, தொக்குஉடன், -- 10
குப்பை வார்மணல் எக்கர்த் துஞ்சும்,
யாணர் வேனில் மன்,இது
மாண்நலம் நுகரும் துணைஉடை யோர்க்கே

திணை - பாலை
இயற்றியவர் - ஆவூர் மூலங்கிழார்

342. தலைவன் கூற்று

ஒறுப்ப ஓவலை, நிறுப்ப நில்லலை,
புணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்குயான்
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே தெனாஅது
வெல்போர்க் கவுரியர் நல்நாட்டு உள்ளதை
மண்கொள் புற்றத்து அருப்புஉழை திறப்பின் -- (5)
ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்,
ஏவல் இளையர் தலைவன், மேவார்
அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்துபடப்
பல்செருக் கடந்த செல்உறழ் தடக்கை,
கெடாஅ நல்இசைத் தென்னன், தொடாஅ -- (10)
நீர்இழி மருங்கில் கல்அளைக் கரந்தஅவ்
வரையர மகளிரின் அரியள்,
அவ்வரி அல்குல் அணையாக் காலே.

திணை - குறிஞ்சி
இயற்றியவர் - மதுரைக் கணக்காயனார்.

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com