garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> அகநானூறு --> நித்திலக்கோவை பகுதி - 3
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                    
381. தலைவன் கூற்று

ஆளி நல்மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
ஏந்தல் வெண்கோடு வாங்கி, குருத்துஅருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண், மஞ்சுதப,
அழல்கான்று திரிதரும் அலங்குகதிர் மண்டிலம் -- 5
நிழல்சூன்று உண்ட நிரம்பா நீளி,
கற்றுரிக் குடம்பைக் கதநாய் வடுகர்
வில்சினம் தணிந்த வெருவரு கவலை,
குருதி ஆடிய புலவுநாறு இருஞ்சிறை
எருவைச் சேவல் ஈண்டுகிளைத் தொழுதி, -- 10
பச்சூன் கொள்ளை சாற்றி, பறைநிவந்து,
செக்கர் வானின் விசும்புஅணி கொள்ளும்
அருஞ்சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
முனைஅரண் கடந்த வினைவல் தானை,
தேன்இமிர் நறுந்தார், வானவன் உடற்றிய -- 15
ஒன்னாத் தெவ்வர் மன்எயில் போல,
பெரும்பாழ் கொண்ட மேனியள் நெடிதுஉயிர்த்து,
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்புஉண,
நெடுநீர் பயந்த நிரைஇதழ்க் குவளை
எதிர்மலர் இணைப்போது அன்ன, தன் -- 20
அரிமதர் மழைக்கண் தெண்பணி கொளவே.

திணை - பாலை
இயற்றியவர் - மதுரை இளங்கௌசிகனார்.

382. தோழி கூற்று

பிறர்உறு விழுமம் பிறரும் நோப,
தம்உறு விழுமம் தமக்கோ தஞ்சம்
கடம்புகொடி யாத்து, கண்ணி சூட்டி,
வேறுபல் குரல ஒருதூக்கு இன்னியம்
காடுகெழு நெடுவேல் பாடுகொளைக்கு ஏற்ப, -- (5)
அணங்கு அயர் வியன்களம் பொலிய, பையத்
தூங்குதல் புரிந்தனர், நமர்என, ஆங்குஅவற்கு
அறியக் கூறல் வேண்டும் தோழி
அருவி பாய்ந்த கருவிரல் மந்தி
செழுங்கோட் பலவின் பழம்புணை யாக, -- (10)
சாரல் பேர்ஊர் முன்துறை இழிதரும்
வறன்உறல் அறியாச் சோலை,
விறல்மலை நாடன் சொல்நயந் தோயே.

திணை - குறிஞ்சி
இயற்றியவர் - கபிலர்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com