garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பத்துப்பாட்டு
                         
திருமுருகாற்றுப்படை மூலம்
திருப்பரங்குன்றம் முருகனின் தோற்றமும் பெருமையும்

திருப்பரங்குன்றம்
முருகனின் தோற்றமும் பெருமையும்

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி,
உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள்,
5 செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை,
மறுஇல் கற்பின் வாள்நுதல் கணவன் -
கடப்பமாலை மார்பினன்
கார்கோள் முகந்த கமம்சூல் மாமழை,
வாள்போழ் விசும்பில் வள்உறை சிதறித்,
தலைப்பெயல் தலைஇய தண்நறுங் கானத்து,
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து -- 10
உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்

சூரா மகளிரின் இயல்பு
மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால், வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
கோபத்து அன்ன தோயாப் பூந்துகில் -- 15
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்,
கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர் இழைச்,
சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த இணைஈர் ஓதிச் -- 20
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைஇடுபு,
பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளித்,
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்,
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்

மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் -- 25
துவர முடித்த துகள்அறு முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇ, கருந்தகட்டு
உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்,
கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇத், துணைத்தக -- 30
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை,
தேம்கமழ் மருதுஇணர் கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி, விரிமலர் -- 35
வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர,
வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்றுஅடு விறல்கொடி
வாழிய பெரிது! என்று ஏத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்புஅகம் சிலம்பப் பாடிச் -- 40
சூரர மகளிர் ஆடும் சோலை,

காந்தளங் கண்ணி சூடிய சென்னியன்
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து,
சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com