garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பத்துப்பாட்டு
                         
சிறுபாணாற்றுப்படை மூலம்

மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல,
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்றுக்
கொல்கரை நறும்பொழில் குயில்குடைந்து உதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடிப், புடை நெறித்துக்,-- 5
கதுப்புவிரித் தன்ன காழ்அக நுணங்குஅறல்
அயில் உருப்பனைய ஆகி, ஐதுநடந்து,
வெயில்உருப் புற்ற வெம்பரல் கிழிப்ப,
வேனில் நின்ற வெம்பத வழிநாள்
காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்ப, -- 10
பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன்முதல் மராஅத்த வரிநிழல் அசைஇ-

விறலியரின் அழகு – தன்மை
ஐதுவீழ் இகுபெயல் அழகுகொண்டு, அருளி,
நெய்கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்புஎன,
மணிவயின் கலாபம் பரப்பிப், பலவுடன் -- 15
மயில், மயிற் குளிக்கும் சாயல்; சாஅய்
உயங்குநாய் நாவின் நல்எழில் அசைஇ
வயங்குஇழை உலறிய அடியின்; அடிதொடர்ந்து,
ஈர்ந்துநிலம் தோயும் இரும்பிடித் தடக்கையின்
சேர்ந்துடன் செறிந்த குறங்கின்; குறங்குஎன --20
மால்வரை ஒழுகிய வாழை; வாழைப்
பூஎனப் பொலிந்த ஓதி; ஓதி
நளிச்சினை வேங்கை நாள்மலர் நச்சிக்,
களிச்சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்குபிதிர்ந்து

யாணர்க் கோங்கின் அவிர்முகை எள்ளி -- 25
பூண்அகத்து ஒடுங்கிய வெம்முலை; முலைஎன
வண்கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன்சேறு இகுதரும் எயிற்றின்; எயிறுஎன
குல்லைஅம் புறவில் குவிமுகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின்; மெல்லியல் -- 30
மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்
நடைமெலிந்து அசைஇய நல்மென் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவரப்

இரவலனை விளித்தல்
பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்
இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ -- 35
நைவளம் பழுநிய நயம்தெரி பாலை
கைவல் பாண்மகன் கடன்அறிந்து இயக்க
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇத்,
துனிகூர் எவ்வமொடு துயர் ஆற்றுப் படுப்ப,
முனிவுஇகந் திருந்த முதுவாய் இரவல! -- 40

வஞ்சி நகரின் நிலை
கொழுமீன் குறைய ஒதுங்கி, வள்இதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை
பைங்கறி நிவந்த பலவின் நீழல்,
மஞ்சள் மெல்லிலை மயிர்ப்புறம் தைவர,
விளையா இளங்கள் நாற, மெல்குபு பெயராக், -- 45
குளவிப்பள்ளிப் பாயல் கொள்ளும்
குடபுலம் காவலர் மருமான் - ஒன்னார்
வடபுல இமயத்து, வாங்குவில் பொறித்த
எழுஉறழ் திணிதோள், இயல்தேர்க் குட்டுவன்
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே; அதாஅன்று -- 50

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com