garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பத்துப்பாட்டு
                         
பொரும்பாணாற்றுப் படை மூலம்

யாழின் வருணனை
அகல்இரு விசும்பில் பாய்இருள் பருகிப்,
பகல்கான்று, எழுதரு பல்கதிர்ப் பருதி
காய்சினம் திருகிய கடுந்திறல் வேனில்,
பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி
வள்இதழ் மாமலர் வயிற்றிடை வகுத்துஅதன் -- 5
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சைப்;
பரிஅரைக் கமுகின் பாளைஅம் பசும்பூக்
கருஇருந் தன்ன, கண்கூடு செறிதுளை;
உருக்கி அன்ன, பொருத்துறு போர்வைச்;
சுனைவறந் தன்ன,இருள்தூங்கு வறுவாய்ப்; -- 10
பிறைபிறந் தன்ன, பின்ஏந்து கவைக்கடை;
நெடும்பணைத் திரள்தோள் மடந்தை முன்கைக்
குறுந்தொடி ஏய்க்கும், மெலிந்துவீங்கு திவவின்;
மணிவார்ந் தன்ன, மாஇரு மருப்பின்;
பொன் வார்ந்தன்ன, புரிஅடங்கு நரம்பின் -- 15
தொடைஅமை வேள்வி இடவயின் தழீஇ.

பாணன் வறுமை
வெந்தெறற் கனலியொடு மதிவலம் திரிதரும்
தண்கடல் வரைப்பில், தாங்குநர்ப் பெறாது,
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போலக், -- 20
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண!

பரிசில் பெற்றோனின் செல்வ நிலை
பெருவறம் கூர்ந்த கானம் கல்லெனக்
கருவி வானம்துளி சொரிந் தாங்குப்,
பழம்பசி கூர்ந்தஎம் இரும்பேர் ஒக்கலொடு -- 25
வழங்கத் தவாஅப் பெருவளன் எய்தி,
வால்உளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண்டு,
யாம்அவ ணின்றும் வருதும் நீயிரும்,

தொண்டைமான் இளந்திரையனின் மாண்பு
இருநிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த் -- 30
திரைதரு மரபின் உரவோன் உம்பல்,
மலர்தலை உலகத்து மன்உயிர் காக்கும்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்,
இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி அன்ன, வசைநீங்கு சிறப்பின், -- 35
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்,
பல்வேல் திரையற் படர்குவர் ஆயின்
கேள்அவன் நிலையே; கெடுகநின் அவலம்!

ஆட்சியின் பெருமை
அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக்,
கைப்பொருள் வௌவும் களவுஏர் வாழ்க்கைக்-- 40
கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன்புலம்;
உருமும் உரறாது; அரவும் தப்பா;
காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டு, ஆங்கு,
அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கி,
சென்மோ, இரவல! சிறக்கநின் உள்ளம்! -- 45

உப்பு வணிகர் செல்லும் வழி
கொழுஞ்சூட்டு அருந்திய, திருந்துநிலை ஆரத்து,
முழவின் அன்ன முழுவர உருளி,
எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக்கை நோன்பார்,
மாரிக் குன்றம் மழை சுமந் தன்ன,
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம் -- 50
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழி சேக்கும் கூடுடைப் புதவின்,
முளைஎயிற்று இரும்பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளைஅரைச் சீறுரல் தூங்கத் தூக்கி,
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த -- 55
விசிவீங்கு இன்னியம் கடுப்பக் கயிறுபிணித்து,
காடி வைத்த கலனுடை மூக்கின்,
மகவுடை மகடூஉப் பகடுபுறம் துரப்பக்
கோட்டுஇணர் வேம்பின் ஏட்டுஇலை மிடைந்த
பாடலைக் கண்ணிப் பருஏர் எறுழ்த் திணி தோள், -- 60
முடலை யாக்கை, முழுவலி மாக்கள்
சிறுதுளைக் கொடுநுகம் நெறிபட நிரைத்த
பொருங்கயிற்று ஒழுகை மருங்கில் காப்பச்,
சில்பத உணவின் கொள்ளை சாற்றிப்,
பல்எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி -- 65

கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டுவழி
எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம்
அரும்பொருள் அருத்தும் திருந்துதொடை நோன்தாள்
அடிபுதை அரணம் எய்திப் படம்புக்குப்
பொருகணை தொலைச்சிய புண்தீர் மார்பின், -- 70
விரவுவரிக் கச்சின், வெண்கை ஒள்வாள்,
வரைஊர் பாம்பின், பூண்டுபுடை தூங்கச்,
சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுஉடை,
கருவில் ஓச்சிய கண்அகன் எறுழ்த்தோள்,
கடம்புஅமர் நெடுவேள் அன்ன, மீளி, -- 75
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்,
தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப, மிரியல்
புணர்ப்பொறை தாங்கிய வடுஆழ் நோன்புறத்து
அணர்ச்செவித் கழுதைச் சாத்தொடு, வழங்கும் -- 80
உல்குடைப் பொருவழிக் கவலைக் காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட்டு இயவின்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com