garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பத்துப்பாட்டு -- > முல்லைபாட்டு
                         
முல்லைப்பாட்டு மூலம்

கார்கால மாலைப்பொழுது
நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
பாடிமிழ் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு
கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவுஎழிலி -- 5
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை

வயதான பெண்டிர் நற்செயல் கேட்க நிற்றல்
அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது -- 10
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்

நற்சொல் கேட்டல்
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள் கைய
கொடுங்கோல் கோவலர் பின்னின்று உய்த்தர -- 15
இன்னே வருகுவர் தாயர் என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம் அதனால்

தலைவியிடம் செய்தி கூறல்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல் தலைவர் வாய்வது நீநின்
பருவரல் எவ்வம் களை மாயோய்எனக்

தலைவியின் கண்ணீர்
காட்டவும் காட்டவும் காணாள் கலுழ்சிறந்து
பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்பக்

பாசறை - படைவீடு
கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில்
சேணாறு பிடவமொடு மைம்புதல் எருக்கி -- 25
வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக், காட்ட
இடுமுள் புரிசை ஏமுற வளைஇப்
படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி

யானைக்குச் சோறு கொடுத்தல்
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற -- 30
தேம்படு கவுள சிறுகண் யானை
ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த
வயல்விளை இன்குளகு உண்ணாது, நுதல்துடைத்து
அயில்நுனை மருப்பில்தம் கையிடைக் கொண்டெனக்
கவைமுள் கருவியின் வடமொழி பயிற்றிக் -- 35
கல்லா இளைஞர் கவளம் கைப்ப,

படைவீட்டு அரண்
கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசைநிலை கடுப்ப நற்போர்
ஓடா வல்லில் தூண் நாற்றிக்
கூடங் குத்திக் கயிறுவாங்கு இருக்கைப் -- 40
பூந்தலை குந்தம் குத்திக் கிடுகுநிரைத்து
வாங்குவில் அரணம் அரணம் ஆக

விளக்கேற்றும் மகளிர்
வேறுபகல் பெரும்படை நாப்பண் வேறோர்
நெடுங்காழ்க் கண்டம் கோலி அகம்நேர்பு
குறுந்தொடி முன்கைக் கூந்தலுஞ் சிறுபுறத்து -- 45
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்
நெய்யுமிழ் கரையர் நெடுந்திரி கொளீஇக்
கையமை விளக்கம் நந்துதொறும் மாட்ட

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com