garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பத்துப்பாட்டு --> மதுரைகாஞ்சி
                         
மதுரைக்காஞ்சி மூலம்

அகன்ற உலகம்
ஓங்குதிரை வியன்பரப்பின்
ஒலி முந்நீர் வரம்புஆக
தேன்தூங்கும் உயர்சிமைய
மலைநாறிய வியன்ஞாலத்து

பாண்டியர் பரம்பரை
வலமாதிரத்தான் வளிகொட்ப -- 5
வியன்நாண்மீன் நெறிஒழுக
பகல்செய்யும் செஞ்ஞாயிறும்
இரவுச்செய்யும் வெண்திங்களும்
மைதீர்ந்து கிளர்ந்துவிளங்க
மதுரைதொழில் உதவ மாதிரம் கொழுக்க -- 10
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனும் மரனும் பயன்எதிர்பு நந்த
நோய் இகந்து நோக்கு விளங்க
மேதக மிகப் பொலிந்த
ஒங்குநிலை வயக்களிறு -- 15
கண்டுதண்டாக் கட்குஇன்பத்து
உண்டு தண்டா மிகு வளத்தான்
உயர்பூரிம விழுத் தெருவில்
பொய் அறியா வாய்மொழியால்
புகழ்நிறைந்த நல்மாந்தரொடு -- 20
நல்ஊழி அடிப்படர
பல்வெள்ளம் மீக்கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக!

பாண்டியர் போர்க்களம்
பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்
நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர் -- 25
இணைஒலி இமிழ் துணங்கைச்சீர்ப்
பிணையூபம் எழுந்தாட
அஞ்சுவந்த போர்களத்தான்
ஆண்தலை அணங்கு அடுப்பின்
வயவேந்தர் ஒண்குருதி -- 30
சினத் தீயின் பெயர்புபொங்க
தெறலருங் கடுந்துப்பின்
விறல் விளங்கிய விழுச்சூர்ப்பின்
தொடித் தோட்கை துடுப்பாக
ஆடுற்ற ஊன்சோறு -- 35
நெறியறிந்த கடிவாலுவன்
அடிஒதுங்கிப் பின்பெயராப்
படையோர்க்கு முருகுஅயர
அமர்கடக்கும் வியன்தானை
தென்னவன் பெயரிய துன்னருந் துப்பின் -- 40
தொல்முது கடவுள் பின்னர் மேய
வரைத்தாழ் அருவிப் பொருப்பின் பொருந!

பாண்டியரின் நால்வகைப் படை
யானைப்படை
விழுச் சூழிய விளங்கு ஒடைய
கடுஞ்சினத்த கமழ்கடாஅத்து
அளறுபட்ட நறுஞ்சென்னிய -- 45
வரைமருளும் உயர்தோன்றல
வினைநவின்ற பேர்யானை
சினம் சிறந்து களன் உழக்கவும்

குதிரைப்படை
மாஎடுத்த மலிகுரூஉத்துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும் -- 50

தேர்ப்படை
வாம்பரிய கடுந்திண்தேர்
காற்று என்னக் கடிது கொட்பவும்

காலாள் படை
வாள்மிகு மறமைந்தர்
தோள் முறையான் வீறு முற்றவும்,

நிலந்தரு திருவிற் பாண்டியன் சிறப்பு
இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் -- 55
பொருது அவரைச் செருவென்றும்
இலங்கு அருவிய வரை நீந்தி
சுரம்போழ்ந்த இகல் ஆற்றல்
உயர்ந்து ஓங்கிய விழுச்சிறப்பின்
நிலம்தந்த பேர்உதவி -- 60
பொலந்தார் மார்பின் நெடியோன்உம்பல்!

இடி போன்றவன்
மரம்தின்னூஉ வரை உதிர்க்கும்
நரைஉருமின் ஏறுஅனையை!

மன்னர்க்கு மன்னன்
உயர்ந்து ஒங்கிய நிரைப்புதவின் -- 65
நெடுமதில் நிலைஞாயில்
அம்பு உமிழ், அயில் அருப்பம்
தண்டாது தலைச்சென்று
கொண்டுநீங்கிய விழுச்சிறப்பின்
தென்குமரி வடபெருங்கல் -- 70
குணகுடகடலா எல்லைத்
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர்தம் கோன் ஆகுவை!

நெல்லூரைக் கொண்டவன்
வான்இயைந்த இருமுந்நீர்ப் -- 75
பேஎம்நிலைஇய இரும்பௌவத்துக்
கொடும்புணரி விலங்குபோழக்
கடுங்காலொடு கரைசேர
நெடுங்கொடிமிசை இதைஎடுத்து
இன்னிசைய முரசம்முழங்க - 80
பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடுஆர நன்குஇழிதரும்
ஆடுஇயல் பெருநாவாய்
மழைமுற்றிய மலைபுரையத்
துறைமுற்றிய துளங்குஇருக்கைத் -- 85
தெண்கடல் குண்டுஅகழிச்
சீர்சான்ற உயர்நெல்லின்
ஊர்கொண்ட உயர்கொற்றவ!

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com