garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பத்துப்பாட்டு --> நெடுநல்வாடை மூலம்
                         
நெடுநல்வாடை மூலம்

மழை பெய்தது
வையகம் பனிப்ப வலன்ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
கோவலர் குளிரால் நடுங்கினர்
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் -- 5
நீடுஇதழ்க் கண்ணி நீரலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க,

விலங்கும் பறவையும்
மாமேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழக் கறவை -- 10
கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக்
குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்

கூதிர்க்கால நிகழ்ச்சி
புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்
பொன்போல் பீரமொடு புதல்புதல் மலரப்
பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி -- 15
இருங்களி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையோடு எவ்வாயும் கவரக்
கயல்அறல் எதிரக் கடும்புநல் சாஅய்ப்
பெயல்உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப; -- 20

இயற்கை எழில்
அங்கண் அகல்வயல் ஆர்பெயல் கலித்த
வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க;
முழுமுதற் கமுதின் மணியுறழ் எருத்தின்
கொழுமடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை


25 நுண்நீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு
தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற
நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க,

வலிமை மிக்க காவலர்
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறுகிடந் தன்ன அகல்நெடுந் தெருவில் -- 30
படலைக் கண்ணிப் பருஏர் ஏறுழ்த் திணிதோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டுமுசுதேறல் மாந்தி மகிழ்சிறந்து
துவலைத் தண்துளி பேணார் பகல்இறந்து
இருகோட்டு அறுவையர் வேண்டுவயின்திரிதர -- 35

மகளிரின் மாலைக் கால வழிபாடு
வெள்ளி வள்ளி வீங்குஇறைப் பணைத்தோள்
மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல்
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்துஎழில்மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து -- 40
அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர.

மனைவாழ் புறாக்கள்
மனையுறை புறவின் செங்கால் சேவல் -- 45
இன்புறு பெடையொடு மன்றுதேர்ந்து உண்ணாது
இரவும் பகலும் மயங்கிக் கையற்று
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப,

மகளிரின் குளிர்காலக் கோலம்
கடியுடை வியல்நகர் சிறுகுறுந் தொழுவர்
கொள்உறழ் நறுங்கல் பலகூட்டு மறுக -- 50
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கில் சாந்தொடு துறப்பக்
கூந்தல் மகளிர் கோதை புனையார்;
பல்இருங் கூந்தல் சில்மலர் பெய்ம்மார்
தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்து -- 55
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப,

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com