garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பத்துப்பாட்டு --> குறிஞ்சிப்பாட்டு மூலம்
                         
குறிஞ்சிப்பாட்டு மூலம்

தோழி செவிலித் தாயிடம் கூறல் அன்னாய் வாழிவேண்டு அன்னை! ஒள்நுதல் ஒலிமென் கூந்தல்என் தோழி மேனி விறல்இழை நெகிழ்ந்த வீவுஅரும் கடுநோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் 5 பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும் வேறுபல் உருவின் கடவுள் பேணி நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி! தோழியின் சொல் வன்மை நல்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும் 10 புள்பிறர் அறியவும் புலம்புவந்து அலைப்பவும் உள்கரந்து உறையும் உய்யா அரும்படர் செப்பல் வன்மையின் செறித்துயான் கடவலின், தலைவி கூறல் - அரிய செயல் முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை நேர்வரும் குரைய கலங்கெடின் புணரும்; 15 சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்; தலைவி தேம்பல் மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப 20 நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி இருவேம் ஆய்ந்த மன்றல் இதுஎன நாம்அறி வுறாலின் பழியும் உண்டோ? ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற ஏனைஉல கத்தும் இயைவதால் நமக்கென 25 மான்அமர் நோக்கம் கலங்கிக் கையற்று ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும். தோழியின் நிலை இகல்மீக் கடவும் இருபெரு வேந்தர் வினையிடைநின்ற சான்றோர் போல இருபேர் அச்சமோடு யானும் ஆற்றலேன் தோழி கூற்று கொடுப்பின் நன்கு உடைமையும் குடிநிரல் உடைமையும் -- 30 வண்ணமும் துணையும் பெரரீஇ எண்ணாது எமியேம் துணிந்த ஏமம்சால் அருவினை நிகழ்ந்த வண்ணம் நீநனி உணரச் செப்பல் ஆன்றிசின் சினவா தீமோ. தினைப்புனக் காவலுக்குச் செல்லல் நெல்கொள் நெடுவெதிர்க்கு அணந்த யானை -- 35 முத்துஆர் மருப்பின் இறங்குகை கடுப்ப துய்த்தலை வாங்கிய புனிறுநீர் பெருங்குரல் நல்கோள் சிறுதினைப் படுபுள் ஓப்பி எல்பட வருதியர் எனநீ விடுத்தலின்

கிளியை ஓட்டுதல்
கலிகெழு மரமிசைச் சேணோன் இழைத்த -- 40
புலிஅஞ்சு இதணம் ஏறி அவண
சாரல் சூரல் தகைபெற வலந்த
தழலும் தட்டையும் குளிறும் பிறவும்
கிளிகடி மரபின ஊழ்ஊழ் வாங்கி
உரவுக் கதிர் தெறூஉம் உருப்பவிர் அமயத்து, -- 45

மழை பெய்தல்
விசும்பு ஆடு பறவை வீழ்பதிப் படர
நிறைஇரும் பௌவம் குறைபட முகந்துகொண்டு
அகல்இரு வானத்து வீசுவளி கலாவலின்
முரசுஅதிர்ந் தன்ன இன்குரல் ஏற்றொடு
நிரைசெலல் நிவப்பின் கொண்மூ மயங்கி -- 50
இன்னிசை முரசின் சுடர்ப்பூண் சேஎய்
ஒன்னார்க்கு ஏந்திய இலங்குஇலை எஃகின்
மின்மயங்கு கருவிய கல்மிசைப்பொழிந்ததென,

நீராடல்
அண்ணல் நெடுங்கோட்டு இழிதரு தெள்நீர்
அவிர்துகில் புரையும் அவ்வெள் அருவி -- 55
தவிர்வுஇல் வேட்கையேம் தண்டாது ஆடிப்
பளிங்குசொரிவு அன்ன பாய்சுனை குடைவழி
நளிபடு சிலம்பில் பாயம் பாடி
பொன்எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்தஎம்
பின்னிருங் கூந்தல் பிழிவனம் துவரி -- 60
உள்ளகம் சிவந்த கண்ணேம்

மலர்கள் கொய்தல்
வள்இதழ் ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ் கூவிளம் -- 65
எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை வான்பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் குடசம்,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, -- 70
விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம் திலகம், தேங்கமழ் பாதிரி,
செருத்தி, அதிரல், பெருந்தண் சண்பகம், -- 75
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமா ரோடம்,
வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
தாழை, தளவம், முள்தாள் தாமரை, -- 80
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங் குரலி,
கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம், -- 85
ஈங்கை, இலவம், தூங்குஇணர்க் கொன்றை,
அடும்பு அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், பல்பூம் பிண்டி,
தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி, -- 90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக் கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னைŽ,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும் -- 95
அரக்குவிரித் தன்ன பருஏர் அம் புழகுடன்,
மால்அங்கு உடைய மலிவனம் மறுகி,

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com