garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பத்துப்பாட்டு --> பட்டினப்பாலை
                         
பட்டினப்பாலை

வசைஇல்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தளியுணவின்
புள்தேம்பப் புயல்மாறி
வான்பொய்ப்பினும் தான்பொய்யா -- 5
மலைத்தலைய கடல் காவிரி
புனல்பரந்து பொன்மொழிக்கும்

மருத நில வளம்
விளைவுஅறா வியன்கழனி
கார்க்கரும்பின் கமழ்ஆலைத்
தீத்தெறுவின் கவின்வாடி -- 10
நீர்ச்செறுவின் நீள்நெய்தல்
பூச்சாம்பும் புலத்துஆங்கண்
காய்ச்செந்நெல் கதிர் அருந்து
மோட்டுஎருமை முழுக்குழவி
கூட்டுநிழல் துயில்வதியும் -- 15
கோள்தெங்கின் குலைவாழைக்
காய்க்கமுகின் கமழ்மஞ்சள்
இனமாவின் இணர்ப்பெண்ணை
முதற்சேம்பின் முளைஇஞ்சி

சோழ நாடு
அகல்நகர் வியல்முற்றத்து -- 20
சுடர்நுதல் மடநோக்கின்
நேரிழை மகளிர் உணங்குஉணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை
பொற்கால் புதல்வர் புரவிஇன்று உருட்டும்
முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும் -- 25
விலங்குபகை அல்லது கலங்குபகை அறியாக்
கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
தோப்புக்கள், பொய்கைகள், எரிகள்
வெள்ளை உப்பின் கொள்ளைசாற்றி
நெல்லொடுவந்த வல்லாய்ப் பஃறி -- 30
பணைநிலைப் புரவியின் அணைமுதல் பிணிக்கும்
கழிசூழ்படப்பைக் கலியாணர்ப்
பொழிற்புறவின் பூந்தண்டலை
மழை நீங்கிய மாவிசும்பின்
மதிசேர்ந்த மகவெண்மீன் -- 35
உருகெழுதிறல் உயர்கோட்டத்து
முருகுஅமர்பூ முரண்கிடக்கை
வரிஅணிசுடர் வான்பொய்கை
இருகாமத்து இணைஏரி,

அறம் நிலைபெறுகின்ற அட்டில் சாலைகள்
புலிப்பொறிப் போர்க்கதவின் -- 40
திருத்துஞ்சும் திண்காப்பின்
புகழ்நிலைஇய மொழிவளர
அறம்நிலைஇய அகன்அட்டில்
சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
யாறுபோலப் பரந்துஒழுகி -- 45
ஏறுபொரச் சேறாகித்
தேர்ஓடத் துகள் கெழுமி
நீறுஆடிய களிறுபோல
வேறுபட்ட வினைஒவத்து
வெண்கோல் மாசுஊட்டும்; -- 50
எருத்துச் சாலை, தவப்பள்ளி
தண்கேணித் தகைமுற்றத்துப்
பகட்டெருத்தின் பலசாலை
தவப்பள்ளித் தாழ்காவின்
அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை முனைஇ, குயில்தம் -- 55
மாயிரும் பெடையோடு இரியல் போகிப்
பூதம் காக்கும் புகல்அருங் கடிநகர்த்
தூதுஉண் அம் புறவொடு துச்சில் சேக்கும்

மறவர் செய்கை
முதுமரத்த முரண்களரி
வரிமணல் அகன் திட்டை -- 60
இருங்கிளை இனன்ஒக்கல்
கருந்தொழில் கலிமாக்கள்
கடல்இறவின் சூடுதின்றும்
வயல்ஆமைப் புழுக்கு உண்டும்
வறள்அடும்பின் மலர்மலைந்தும் -- 65
புனல் ஆம்பல் பூச்சூடியும்
நீல்நிற விசும்பின் வலன்ஏர்பு திரிதரும்
நாள்மீள் விராஅய கோள்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலர்உடன் குழீஇக்
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப் - - 70
பெருஞ்சினத்தால் புறக்கொடா அது
இரும்செருவின் இகல்மொய்ம்பினோர்
கல்லெறியும் கவண்வெரீஇப்
புள் இரியும் புகர்ப் போந்தை;

புறச்சேரி
புறழ்ப்பன்றிப் பல்கோழி
உறைக்கிணற்றுப் புறச்சேரி
மேழகத் தகரொடு சிவல் விளையாட,

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com