garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பத்துப்பாட்டு --> மலைபடுகடாம்
                         
மலைபடுகடாம்

திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்
விண்ணதிர் இமிழ்இசை கடுப்பப் பண் அமைத்துத்
திண்வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண்ணுருக்கு உற்ற விளங்கு சுடர்ப்பாண்டில்
மின்னிரும் பீலி அணித்தழைக் கோட்டொடு -- 5
கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த்த தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடு.
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ
நடுவுநின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை,
கடிகவர்பு ஒலிக்கும் வல்லாய் எல்லரி, -- 10
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்,

வழியின் தன்மை
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்
கடுக்கலித்து எழுந்த கண்ணகன் சிலம்பில்
படுத்துவைக் தன்ன பாறை மருங்கின் -- 15
எடுத்துநிறுத் தன்ன இட்டருஞ் சிறுநெறி
தொடுத்த வாளியர் துணைபுணர் கானவர்
இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும்
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
இடிச்சுர நிவப்பின் இயவுக்கொண்டு ஒழுகி, -- 20

பேரியாழின் இயல்பு
தொடித்திரிவு அன்ன தொண்டுபடு திவவின்
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகாக்
குரல்ஓர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின்
அரலை தீர உரீஇ, வரகின்
குரல்வார்ந் தன்ன நுண்துளை இரீஇ, -- 25
சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்குதுளை செறிய ஆணி முடுக்கிப்
புதுவது புனைந்த வெண்கை பாப்பமைத்துப்
புதுவது போர்த்த பொன்போல் பச்சை
வதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால் -- 30
மடந்தை மாண்ட நுடங்குஎழில் ஆகத்து
அடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப,
அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது,
கவடுபடக் கவைஇய சென்றுவாங்கு உந்தி
நுணங்குஅரம் நுவறிய நுண்தீர் மாமைக் -- 35
களங்கனி அன்ன கதழ்ந்துகிளர் உருவின்,
வணர்ந்து ஏந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ்,

பாணரும் விறலியரும்
அமைவரப் பண்ணி அருள்நெறி திரியாது
இசைபெறு திருவின் வேத்தவை ஏற்பத்
துறைபல முற்றிய பைதீர் பாணரொடு -- 40
உயர்ந்துஓங்கு பெருமலை ஊறுஇன்றுஏறலின்
மதம்தபு ஞமலி நாவின் அன்ன
துளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடிக்
கணங்கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ
விலங்குமலைத்து அமர்ந்த சேயரி நாட்டத்து -- 45
இலங்குவளை விறலியர்,

கூத்தர் தலைவன்
நின்புறம் சுற்றக் கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழல்
புனல்கால் கழீஇய மணல்வார் புறவில்
புலம்புவிட்டு இருந்த புனிறுஇல் காட்சிக்
கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ! -- 50

யாம் பரிசில் பெற்றுவந்தோம்
தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்
மீமிசை நல்யாறு கடல்படர்ந் தாஅங்கு
யாம்அவண் நின்றும் வருதும்;
நன்னன் சேய் நன்னன் பெருமை நீயிரும்
கனிபொழி கானம் கிளையொடு உணீஇய
துனைபறை நிவக்கும் புள்ளினம் மானப் -- 55
புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
வனைபுனை எழில்முலை வாங்குஅமைத் திரள்தோள்
மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்
முனைபாழ் படுக்கும் துன்னருந் துப்பின்
இசைநுவல் வித்தின் நசைஏர் உழவர்க்குப் -- 60
புதுநிறை வந்த புனல்அம் சாயல்
மதிமாறு ஓரா நன்றுணர் சூழ்ச்சி
வில்நவில் தடக்கை மேவரும் பெரும்பூண்
நன்னன்சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு
உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுதுஎதிர்ந்த -- 65
புள்ளினிர் மன்ற, என்தாக் குறுதலின்,

வழியும் பெருமையும்
ஆற்றின் அளவும் அசையும் நல் புலமும்
வீற்றுவளம் சுரக்கும் அவன் நாடுபடுவல்சியும்
மலையும் சோலையும் மாபுகல் கானமும்
தொலையா நல்லிசை உலமொடு நிற்பப் -- 70
பலர்புறம் கண்டுஅவர் அருங்கலம் தரீஇப்
புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும்
இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு
அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூத்துளி பொழிந்த பொய்யா வானின் -- 75
வீயாது சுரக்கும்அவன் நாள்மகிழ் இருக்கையும்,

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com