garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> பத்துப்பாட்டு
பத்துப்பாட்டு

சங்கநூல்களில் பத்துப்பாட்டு நூல் ஒரு கலைச்சுரங்கம். சங்கநூல்களில் பாட்டு என்றாலே பத்துப் பாட்டைத் தான் குறிக்கும். பத்துப்பாட்டு முழுவதும் பண்பாட்டு செய்திகள், வரலாற்றுச் செய்திகள், உணவு, உடை, அணிகலன்கள், தொழில்கள், வணிகம், சமுதாயம், சமயம் பற்றிய செய்திகளே அடங்கும்.

முருகு பொருநாறு பாண்இரண்டு - முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.


தமிழர் நிலத்தை ஐந்தாகப் பகுத்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. இந்த ஐவகை நிலங்களில் வாழ்பவர்களின் உணவு வகைகளும் தொழில்களும் வாழ்க்கை முறைகளும் ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு வகையாக அமைந்திருக்கும். தமிழகத்தின் பழங்கால வரலாற்றை அறிவதற்கு இப்பத்துப் பாடல்கள் மிகுதியாகத் துணைபுரிகின்றன. பாண்டியநாட்டு வரலாற்றையும் மதுரையின் பெருமையையும் தெளிவாக உணர்த்துவது மதுரைக்காஞ்சி, சோழ நாட்டின் பெருமையையும் சோழநாட்டின் வளங்களையும் தெளிவாக எடுத்து உணர்த்துவது பட்டினப்பாலையும், பொருநர் ஆற்றுப் படையும் தொண்டைமான் இளந்திரையனின் சிறப்புக்களையும், காஞ்சிப்பதியின் பெருமையினையும் பேசுவது பெரும் பாணாற்றுப்படை, குறுநில மன்னன் ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனின் பெருமைகளைச் சிறுபாண் ஆற்றுப்படை செப்புகின்றது. பல்குன்றத்துக் கோட்டது நன்னன்சேய் நன்னன் பெருமைகளை மலைபடுகடாம் எடுத்துரைக்கின்றது. தமிழக மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது பத்துப்பாட்டு.

1. திருமுருகாற்றுப்படை: இயற்றியவர் - நக்கீரர். இப்பாடல் பத்துப் பாடலில் கடவுள் வாழ்த்து பாடலாகவும் அமைந்துள்ளது. இவ்வாற்றுப் படையில் முருகர் கடவுளை பற்றிய ஒரு கதை உண்டு. ஒரு பூதம் மலைக்குகையிலே 999 பேரை அடைத்து வைத்திருந்தது. ஆயிரமாவது ஆள் ஒருவரை தேடிக் கொண்டு இருந்தபோது நக்கீரர் அகப்பட்டார். அவரை அடைத்து வைத்துவிட்டு குளிக்கச் சென்றது. அப்போது நக்கீரர் தான் வணங்கும் முருகன் மீது அவன் அருளைப்பெற பாடி விடுவிக்கப் பெற்றது திருமுருகாற்றுப்படை.

2. பொருநர் ஆற்றுப்படை: இயற்றியவர் - முடத்தாமக் கண்ணியார். பொருநர் ஆற்றுப்படையின் தலைவன் சோழன் கரிகால் பெருவளத்தான். இவன் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து அரசாண்டவன் எனப் பட்டினப்பாலை கூறுகிறது. இவன் சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன். இளமையில் நெருப்பால் சுடப்பட்டதால் கால் கரியாயிற்று என்பதால் கரிகாலன் என்ற பெயரைப் பெற்றதாகவும் கூறுவர்.

3. சிறுபாணாற்றுப்படை: இயற்றியவர் - இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். பாடப்பெற்ற தலைவன் ஒய்மானாட்டு நல்லியக்கோடன் இவன் ஒய்மான் நல்லிக்கோடன் எனவும் அழைக்கப் பெற்றான். இவனைப் பாடிய புலவர் நல்லூர் நத்தத்தனாரும் நன்னாகனாரும் ஆவர். இவனுடைய பரம்பரையினராக ஒய்மான் நல்லியாதன் ஒய்மான் வில்லியாதன் என இருவர் குறிக்கப் பெறு கின்றனர்.

4. பொருநராற்றுப்படை: இயற்றியவர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார். பாடப்பெற்றவன் தொண்டைமான் இளந்திரையன். இவன் காஞ்சியை ஆண்டவன். தொண்டைமான் இளந்திரை யினிடத்துப் பரிசு பெற்ற பாணன் தன்னை எதிர்ப்பட்டபெரும்பாணன் ஒருவனை நோக்கி நாங்கள் தொண்டைமான் இளந்திரையனிடம் சென்று பெருஞ்செல்வத்தையும் குதிரைகளையும் யானைகளையும் பெற்று வருகின்றோம். நீங்களும் சென்றால் உங்கள் வறுமை நீங்கி எல்லாச் செல்வங் களையும் பெற்று வருவீர்கள் என்று கூறி அனுப்புகிறான்.

5. முல்லைப்பாட்டு: இயற்றியவர் - பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார். முல்லை என்ற சொல் ஐவகை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலம் பற்றியதாகும். இங்கு முல்லைப்பாட்டு என்பது முல்லை நில மக்களின் ஒழுக்கமாகிய ஆற்றி இருத்தலைக் குறிக்கும்.

6. மதுரைக்காஞ்சி: இயற்றியவர் - மாங்குடி மருதனார். மதுரைக்காஞ்சியில் பாடப்பெற்ற அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நெடுஞ்செழியன் என்ற பெயருடன் வாழ்ந்த பாண்டியர் இருவர். ஒருவன் இப்பாட்டுடைத் தலைவன். மற்றொருவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பெற்றுள்ள பாண்டியன். இவ்விருவருள் காலத்தால் முந்தியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.

7. நெடுநல்வாடை: இயற்றியவர் - நக்கீரர். பாடப்பெற்றவன் பாண்டியன் நெடுஞ்செழியன். நீண்ட நல்ல வாடைக்காற்று என்பது பொருள். பிரிந்திருந்த தலைவன் போர்க்களத்தில் பகைவரை வெல்வதையே நோக்கமாகக் கொண்டிருந்ததால் அவனுக்கு நல்ல வாடையாக அமைந்தது.

8. குறிஞ்சிப்பாட்டு: இயற்றியவர் - கபிலர். பாடப்பெற்றவர் ஆரிய அரசன் பிரகத்தன் தமிழ் பண் பாட்டைப் பற்றி அறிவித்ததற்காக கபிலரால் பாடப்பெற்ற பாடல் இது. ஐவகை நிலங்களுள் குறிஞ்சி நிலத்தைப் பற்றி பாடப்பட்டது. குறிஞ்சி நிலத்தை பற்றிய செய்திகளையறியும் பாட்டு குறிஞ்சிப்பாட்டு.

9. பட்டினப்பாலை: இயற்றியவர் - கடியலூர் உருத்திரங் கண்ணனார். பாடப்பெற்றவர் சோழன் கரிகால் பெருவளத்தான். தலைவன் பொருள் வயிற்பிரிவு காரணமாக தலைவியைப் பிரிந்து செல்ல நினைக்கிறான். தலைவி மேலுள்ள அன்பு காரணத்தால் அவளை பிரிய மறுக்கிறான். பாலை நிலத்தினைப் பற்றிய செய்திகளையறியும் பாடல் இது.

10. மலைபடுகடாம்: இயற்றியவர் - இரணிய முட்டத்து பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார். பாடப்பெற்றவன் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னனைப் பாடியது. மலைப்படு கடாம் என்ற சொல்லுக்கு இங்கு ஓசை என்பது பொருள். மலையில் பட்ட பல ஓசைகளின் தொகுப்பு மலைப்படுகடாம் ஆயிற்று. இதற்கு கூத்தராற்றுப்படை என்றும் அழைப்பதுண்டு.

திருமுருகாற்றுப்படை பாடல்கள்

பொருநர் ஆற்றுப்படை பாடல்கள்

சிறுபாணாற்றுப்படை பாடல்கள்

பொருநராற்றுப்படை பாடல்கள்

முல்லைப்பாட்டு பாடல்கள்

மதுரைக்காஞ்சி பாடல்கள்

நெடுநல்வாடை பாடல்கள்

குறிஞ்சிப்பாட்டு பாடல்கள்

பட்டினப்பாலை பாடல்கள்

மலைபடுகடாம் பாடல்கள்

garuda e learning websites, free tamil old website
 
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com