garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> நற்றிணை --> முல்லைத் திணை பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                        
நற்றிணை - முல்லைத் திணை
1. தலைவன் கூற்று (பாடல் எண் – 21)

விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர்
அரைச்செறி கச்சை யாப்புஅழித்து அசைஇ
வேண்டுஅமர் நடையர் மென்மெல வருக!
தீண்டா வைமுள் தீண்டிநாம் செலற்கு
ஏகுமதி வலவ தேரே! உதுக்காண் 5
உருக்குறு நறுநெய் பால்விதிர்த் தன்ன
அரிக்குரல் மிடற்ற அந்நுண் பல்பொறிக்
காமரு தகைய கான வாரணம்
பெயல்நீர் போகிய வியன்நெடும் புறவின்
புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி 10
நாளிரை கவர மாட்டித்தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே.

இயற்றியவர் - மருதநனிள நாகனார்
2. தலைவன் கூற்று (பாடல் எண் – 59)

உடும்பு கொலீஇ வரிநுணல் அகழ்ந்து
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி
எல்லுமுயல் எறிந்த வேட்டுவன் அம்சுவல்
பல்வேறு பண்டைத் தொடைமறந்து இல்லத்து
இருமடைக் கள்ளின் இன்களி செருக்கும் 5
வன்புலக் காட்டுநாட் டதுவே அன்புகலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை
நுண்முகை அவிழ்ந்த புறவின்
பொறைதலை மணந்தன்று உயவுமார் இனியே.

இயற்றியவர் – கபிலர்
3. தலைவி கூற்று (பாடல் எண் – 69)

பல்கதிர் மண்டிலம் பகல்செய்து ஆற்றிச்
சேய்உயர் பெருவரைச் சென்றவண் மறையப்
பறவை பார்ப்புவயின் அடையப் புறவின்
மாஎருத்து இரலை மடப்பினை தழுவ
முல்லை முகைவாய் திறப்பப் பல்வயின் 5
தோன்றி தோன்றுபு புதல்விளக் குறாஅ
மதர்வை நல்லான் மாசில் தெண்மணி
கொடுங்கோல் கோவலர் குழலோடு ஒன்றி
ஐதுவந்து இசைக்கும் அருளில் மாலை
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் 10
இனைய ஆகித் தோன்றின்
வினைவலித்து அமைதல் ஆற்றலர் மன்னே.

இயற்றியவர் – சேகம்பூதனார்
4. தலைவன் கூற்று (பாடல் எண் – 81)

இருநிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று
ஆதி போகிய அசைவில் நோன்தாள்
மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி
கொய்ம்மயிர் எருத்தின் பெய்ம்மணி ஆர்ப்பப்
பூண்கதில் பாகநின் தேரே! பூண்தாழ் 5
ஆக வனமுலைக் கரைவலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம்மா அரிவை
விருந்துஅயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன்னகை காண்கம்
உறுபகை தணித்தனன் உரவுவாள் வேந்தே. 10

இயற்றியவர் – அகம்பன்மாலாதனார்
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com