garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> நற்றிணை --> மருதம் திணை பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                        
நற்றிணை - மருதம் திணை
1. தலைவி கூற்று (பாடல் எண் – 20)

ஐய குறுமகள் கண்டிகும் வைகி
மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ்இணர்த்
தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்கியல் அசைவரக் கலிங்கம் துயல்வரச்
செறிதொடி தெளிர்ப்ப வீசி மறுகில் 5
பூப்போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிச்
சென்றனள் வாழிய மடந்தை நுண்பல்
சுணங்கு௮ணி வுற்ற விளங்கு பூணள்
மார்புறு முய்க்கிடை ஞெமிர்ந்த சோர்குழைப்
பழம்பிணி வைகிய தோளிணைக் 10
குழைந்த கோதைக் கொடிமுயங் கலளே.

இயற்றியவர் – ஓரம்போகியார்

2. தோழி கூற்று (பாடல் எண் – 30)

கண்டனென் மகிழ்ந, கண்டுஎவன் செய்கோ
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கிநின்
மார்புதலைக் கொண்ட மாணிழை மகளிர் 5
கவல்ஏ முற்ற பைதரு காலைக்
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன்வீழ்பு
பலர்கொள் பலகை போல
வாங்க வாங்கநின்று ஊங்குஅஞர் நிலையே. 10

இயற்றியவர் – கொற்றனார்

3. பரத்தை கூற்று (பாடல் எண் – 40)

நெடுநா ஒண்மணி கடிமனை இரட்டக்
குரையிலைப் போகிய விரவுமணற் பந்தர்ப்
பெரும்பாண் காவல் பூண்டென ஒருசார்த்
திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறியுற விரிந்த அறுவை மெல்லணைப் 5
புனிறுநாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்ஆட்டு ஈரணிப்
பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈரிமை பொருந்த
நள்ளென் கங்குல் கள்வன் போல 10
அகன்துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே.

இயற்றியவர் - கோண்மா நெடுங்கோட்டனார்.

4. தோழி கூற்று (பாடல் எண் – 50)

அறியா மையின் அன்னை அஞ்சிக்
குழையன் கோதையன் குறும்பைந் தொடியன்
விழவுஅயர் துணங்கை தழுஉகஞ் செல்ல
நெடுநிமிர் தெருவில் கைபுகு கொடுமிடை
நொதும லாளன் கதுமெனத் தாக்கலின் 5
கேட்பார் உளர்கொல் இல்லைகொல் போற்றுஎன
யாணது பசலை என்றனன் அதன்எதிர்
நாணிலை எலுவ என்றுவந் திசினே
செறுந௫ம் விழையும் செம்ம லோன்என
நறுநுதல் அரிவை போற்றேன் 10
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே.

இயற்றியவர் - மருதம் பாடிய இளங்கடுங்கோ

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com