garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> நற்றிணை --> பாலை திணை பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
                           
நற்றிணை - பாலை திணை
1. கண்டோர் கூற்று (பாடல் எண் – 2)

அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து
ஒலிவல் ஈந்தின் உலவைஅம் காட்டு
ஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த
செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய
வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை 5
மரல்நோக்கும் இண்டுஇவர் ஈங்கைய சுரனே;
வையெயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்
காலொடு பட்ட மாரி
மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே. 10

இயற்றியவர் – பெரும்பதுமனார்

2. தலைவன் கூற்று

ஈன்பருந்து உயவும் வான்பொரு நெடுஞ்சினைப்
பொரியரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டு ஆடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்ச் 5
சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய
வினைமுடித் தன்ன இனியோள்
மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே.

இயற்றியவர் - இளங்கீரனார்

3. தோழி கூற்று (பாடல் எண் – 7)

சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்கப்
பெருவரை அடுக்கத்து அருவி ஆர்ப்பக்
கல்அலைத்து இழிதருங் கடுவரல் கான்யாற்றுக்
கழைமாய் நீத்தம் காடுஅலை ஆர்ப்பத்
தழங்குகுரல் ஏறொடு முழங்கி வானம் 5
இன்னே பெய்ய மின்னுமால் தோழி
வெண்ணெல் அருந்திய வரிநுதல் யானை
தண்நறுஞ் சிலம்பின் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடுபெருங் காட்டே.

இயற்றியவர் – நல்வெள்ளியார்

4. தலைவன் கூற்று (பாடல் எண் – 9)

அழிவில முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண்கண் டாஅங்கு
அலமரல் வருத்தந் தீர யாழநின்
நலமென் பணைத்தோள் எய்தினம் ஆதலின்
பொரிப்பூம் புன்கின் எழில்தகை ஒண்முறி 5
சுணங்கணி வனமுலை அணங்குகொளத் திமிரி
நிழல்காண் தோறும் நெடிய வைகி
மணல்காண் தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகுமதி வாலெயிற் றோயே!
மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும் 10
நறுந்தண் பொழில கானம்
குறும்பல் ஊரயாம் செல்லும் ஆறே.

இயற்றியவர் - பாலை பாடிய பெருங்கடுங்கோ

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com