garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> நற்றிணை
நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவது நூலான நற்றிணை அகத்திணைப் பிரிவுக்கு உரிய நூலாகும். நற்றிணையில் நானூறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 234 ஆம் பாடல் இன்றுவரை கிடைக்கப் பெற வில்லை. சங்ககாலத்துச் சான்றோர்கள் எழுதிய காதற் கவிதை நூல்களில் நற்றிணை மிகச் சிறந்த தொகுப்பாக விளங்குகின்றது. நற்றிணைத் தொகுப்பு ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடிவரை நானூறு பாடல்களைக் கொண்டநூலாகும். செல்வத்தைப் பற்றி நற்றிணையில் அழகாக கூறப்பட்டுள்ளது. செல்வம் என்பது தன்னைச் சேர்ந்தவர்களின் துன்பத்தை அறிந்து அதனைப் போக்குவதற்குரிய வழிகளை காண்பதாகும். தன்னிடம் உள்ள செல்வப் பெருமைகளை காண்பிப்பது பண்பாடு ஆகாது என்று நற்றிணையில் மிக அழகாக கூறப்பட்ள்ளது. நற்றிணையில் இடம்பெற்றுள்ள 400 பாடல்கள் நீங்கலாக இடம்பெற்றுள்ள கடவுள் வாழ்த்துப் பாடலை பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார். 193 புலவர்கள் நற்றிணையில் உள்ள பாடல்களைப் பாடியுள்ளனர்.

கடவுள் வாழ்த்து

மாநிலஞ் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகரி யோனே.

இயற்றியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்

மருதம் திணை பாடல்கள்

நெய்தல் திணை பாடல்கள்

குறிஞ்சி திணை பாடல்கள்

பாலை திணை பாடல்கள்

முல்லை திணை பாடல்கள்

garuda e learning websites, free tamil old website
 
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com