garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> நற்றிணை --> நெய்தல் திணை பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
                           
நற்றிணை - நெய்தல் திணை
1. தோழி கூற்று (பாடல் எண் – 4)

கானல்அம் சிறுகுடிக் கடல்மேம் பரதவர்
நீல்நிறப் புன்னைக் கொழுநிழல் அசைஇத்
தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி
அங்கண் அரில்வலை உணக்குந் துறைவனொடு
அலரே, அன்னை அறியின் இவண்உறை வாழ்க்கை 5
அரிய வாகும் நமக்கெனக் கூறின்,
கொண்டுஞ் செல்வர்கொல் தோழி? உமணர்
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்
கணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்
மணல்மடுத்து உரறும் ஓசை கழனிக் 10
கருங்கால் வெண்குருகு வெரூஉம்
இருங்கழிச் சேர்ப்பின்தம் உறைவுஇன் ஊர்க்கே.

இயற்றியவர் – அம்மூவனார்

2. தோழி கூற்று (பாடல் எண் – 11)

பெய்யாது வைகிய கோதை போல
மெய்சா யினையவர் செய்குறி பிழைப்ப
உள்ளி நொதுமலர் ஏர்புரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிக மாளநின் நெஞ்சத் தானே 5
புணரி பொருத பூமணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஒம்பி
வலவன் வள்புஆய்ந்து ஊர
நிலவுவிரிந் தன்றாற் கான லானே.

இயற்றியவர் – உலோச்சனார்

3. தோழி கூற்று (பாடல் எண் – 15)

முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்
நுணங்குதுகில் நுடக்கம் போலக் கணங்கொள
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!
பூவின் அன்ன நலம்புதிது உண்டு
நீயுணர்ந் தனையே அன்மையின் யாமே 5
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி
மாசில் கற்பின் மடவோள் குழவி
ஒய்ய வாங்கக் கைவிட் டாங்குச்
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம் அலர்கஇவ் வூரே.

இயற்றியவர் – அறிவுடைநம்பி

4. தலைவன் கூற்று (பாடல் எண் – 16)

புணரின் புணராது பொருளே பொருள்வயின்
பிரியின் புணராது புணர்வே ஆயிடைச்
சேர்பினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு
உரியை வாழிஎன் நெஞ்சே! பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பண் 5
ஓடுமீன் வழியில் கெடுவ யானே
விழுநீர் வியலகந் தூணி யாக
எழுமாண் அளக்கும் விழுநெதி பெறினுங்
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக்கண்
அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தனன் 10
எனைய ஆகுக வாழிய பொருளே.

இயற்றியவர் – அறிவுடைநம்பி

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com