garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> நற்றிணை --> குறிஞ்சி திணை பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
நற்றிணை - குறிஞ்சி திணை
1. தலைவி கூற்று

நின்ற சொல்லர் நீடுதோன்று இனியர்
என்றும் என்தோள் பிரிபுஅறி யலரே
தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை -- 5
நீரின்று அமையா உலகம் போலத்
தம்மின்று அமையா நம்நயந்து அருளி
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்புஅறி யலரே.

இயற்றியவர் - கபிலர்

2. தோழி கூற்று (பாடல் எண் – 5)

நிலம்நீர் ஆரக் குன்றம் குழைப்ப
அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்பக்
குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர்
நறுங்காழ் ஆரம் கற்றுவன அகைப்பப்
பெரும்புயல் பொழிந்த தொழில எழிலி
தெற்குஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்
அரிதே காதலர்ப் பிரிதல் இன்றுசெல்
இகுளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கிதழ் மழைக்கண் பயந்த தூதே.

இயற்றியவர்– பெருங்குன்றூர்கிழார்

3. தலைவன் கூற்று (பாடல் எண் – 6)

நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்
நார்உரித் தன்ன மதன்இல் மாமைக்
குவளை அன்ன ஏந்தொழில் மழைக்கண்
திதலை அல்குல் பெருந்தோள் குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநீர்ப் பெறினே, 5
இவர்யார் என்குவள் அல்லள், முணாஅது
அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
எறிமட மாற்கு வல்சி யாகும்
வல்வில் ஓரி கானம் நாறி
இரும்பல் ஒலிவருங் கூந்தல் 10
பெரும்பே துறுவள்யாம் வந்தனம் எனவே.

இயற்றியவர் – பரணர்

4. தலைமகன் கூற்று (பாடல் எண் – 8)

அல்குபடர் உழந்த அரிமதர் மழைக்கண்
பல்பூம் பகைத்தழை அடங்கும் அல்குல்
திருமணி புரையும் மேனி மடவோள்
யார்மகள் கொல்இவள் தந்தை வாழியர்
துயரம் உறீஇயினள் எம்மே அகல்வயல் -- 5
அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும்
தண்சேறு தாஅய் மதனுடை நோன்தாள்
கண்போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண்தேர்ப் பொறையன் தொண்டி
தன்திறம் பெறுகஇவள் ஈன்ற தாயே.

இயற்றியவர் – பெயர் தெரியவில்லை

5. தோழி கூற்று (பாடல் எண் – 13)

எழாஅ யாகலின் எழில்நலந் தொலைய
அழாஅ தீமோ நொதுமலர் தலையே
ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த
பகழி யன்ன சேயரி மழைக்கண்
நல்ல பெருந்தோ ளோயே கொல்லன்
எறிபொற் பிதிரின் சிறுபல் காய
வேங்கை வீயுகும் ஓங்குமலைக் கட்சி
மயில்அறிபு அறியா மன்னோ
பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே.

இயற்றியவர் – கபிலர்

6. தலைமகள் கூற்று (பாடல் எண் – 17)

நாள்மழை தலைஇய நன்னெடுங் குன்றத்து
மால்கடல் திரையில் இழிதரும் அருவி
அகலிருங் கானத்து அல்குஅணி நோக்கித்
தாங்கவுந் தகைவரை நில்லா நீர்சுழல்பு
ஏந்தெழின் மழைக்கண் கலுழ்தலின் அன்னை 5
எவன்செய் தனையோநின் இலங்குஎயிறு உண்கென
மெல்லிய இனிய கூறலின் வல்விரைந்து
உயிரினுஞ் சிறந்த நாணு நனிமறந்து
உரைக்கல்உய்ந் தனனே தோழி சாரற்
காந்தள் ஊதிய மணிநிறத் தும்பி
தீந்தொடை நரம்பின் முரலும்
வான்தோய் வெற்பன் மார்புஅணங் கெனவே.

இயற்றியவர் - நொச்சி நியமங்கிழார்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com