garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> அ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                                            
1. தும்பை மாலை சூடிய அழும்பில் தலைவன். (பாடல் எண் – 283)

ஒண் செங் குரலித் தண்கயம் கலங்கி
வாளை நீர் நாய் நாள் இரை பெறூஉப்
பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும்
அழும் பிலன் அடங்கான் தகையும் என்றும், (5)
வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
மன்றுள் என்பது கெட . . . . தானே பாங்கற்கு
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க,
உயிர்ப் புறப் படாஅ அளவைத் தெறுவர்த்
தெற்றிப் பாவை திணிமணல் அயரும், (10)
மென்தோள் மகளிர் நன்று புரப்ப,
இமிழ்ப்புற நீண்ட பாசிலைக்
கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே!

திணை - தும்பை
துறை – பாண்பாட்டு

இயற்றியவர் - புலவர் அடைநெடுங்கல்வியார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்.

2. ஒன்றும் ஆகாமை அரிது.
எண் – 344)

செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை
செறிவளை மகளிர் ஓப்பலின், பறந்தெழுந்து,
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு,
நிறைகால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ!
புகைபடு கூர்எரி பரப்பிப் பகை செய்து (5)
பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ!
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே!
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி
கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே!

திணை - காஞ்சி
துறை – மகட்பாற் காஞ்சி

இயற்றியவர் - புலவர் அடை நெடுங் கல்வியார்.
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்.

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com