garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> ஆ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                                    
1. கூற்றுவன் பசிதீர்த்த சோழன்
(பாடல் எண் – 227)

நனிபே தையே நயன்இல் கூற்றம்!
விரகு இன் மையின் வித்து அட்டு உண்டனை!
இன்னும் காண்குவை, நன்வாய் ஆகுதல்;
ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும்,
குருதியம் குரூஉப்புனல் பொருகளத்து ஒழிய, (5)
நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின்
வாடு பசி அருத்திய வசைதீர் ஆற்றல்
நின்னோர் அன்ன பொன்னியற் பெரும் பூண்
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி
இனையோற் கொண்டனை ஆயின், (10)
இனியார் மற்று நின் பசிதீர்ப் போரே!

திணை - பொதுவியல்
துறை – கையறுநிலை

இயற்றியவர் - புலவர் ஆடுதுறை மாசாத்தனார்
அரசர் - சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன்

2. வாடாத் தாமரை மாலை தருவான்
எண் – 319)

பூவற் படுவிற் கூவல் தோண்டிய
செங்கண் சின்னீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி,
யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று;
படலை முன்றில் சிறுதினை உணங்கல் (5)
புறவும், இதலும், அறவும், உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே! அதனால்
முயல் சுட்ட வாயினும் தருகுவோம்; புகுந்தது
ஈங்கு இருந் தீமோ முதுவாய்ப் பாண!
கொடுங் கோட்டு ஆமான் நடுங்கு தலைக் குழவி (10)
புன் றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
வேந்து விடு தொழிலொடு சென்றனன், வந்துநின்
பாடினி மாலை அணிய,
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே! (15)

திணை - வாகை
துறை – வல்லாண் முல்லை

இயற்றியவர் - புலவர் ஆலங்குடி வங்கனார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்.

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com