garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> இ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                                    
1. புலவர் நோக்கும் புரவலன்
(பாடல் எண் – 42)

ஆனா ஈகை, அடுபோர் அண்ணல்! நின்
யானையும் மலையின் தோன்றும், பெரும! நின்
தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து
அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின், (5)
புரைதீர்ந் தன்று, அது புதுவதோ அன்றே!
தண்புனற் பூசல் அல்லது, நொந்து
களைக வாழி வளவ! என்று நின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது,
புலிபுறங் காக்கும் குருளை போல,
மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்
பெருவிரல் யாணர்த் தாகி, அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும், உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும், அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும், பெருந்துறை (15)
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்,
வன்புலக் கேளிர்க்கு வருவிருந்து அயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி,
நிலவரை இழிதரும் பல்யாறு போலப் (20)
புலவர் எல்லாம் நின் நோக் கினரே!
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்று வெகுண் டன்ன முன்பொடு,
மாற்று இரு வேந்தர் மண்நோக் கினையே!

திணை - வாகை
துறை – அரச வாகை

இயற்றியவர் - புலவர் இடைக்காடனார்
அரசர் - குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.

2. எழுவரை அடக்கிய ஒருவன்
(எண் – 76)

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று; இவ்வுலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்; திரள் அரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண் தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து. (5)
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி,
ஒலியல் மாலையொடு பொலியச் சூடிப்,
பாடுஇன் தெண்கிணை கறங்கக் காண்தக
நாடுகெழு திருவின் பசும்பூண் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப் (10)
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க,
ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே!

திணை - வாகை
துறை – வல்லாண் முல்லை

இயற்றியவர் - புலவர் இடைக்குன்றூர் கிழார்
அரசர் - தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com