garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> உ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
1. கள்ளுண்டு அநிரை மீட்பவன்
(பாடல் எண் – 258)

முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
நிறுத்த ஆயம் தலைச் சென்று உண்டு
பச் சூன் தின்று பைந்நிணம் பெருத்த
எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப் (5)
புலம்புக் கனனே, புல்அணற் காளை;
ஒரு முறை உண்ணா அளவைப் பெருநிரை
ஊர்ப் புறம் நிறையத் தருகுவன்; யார்க்கும்
தொடுதல் ஓம்பு மதி முது கட் சாடி;
ஆதரக் கழுமிய துகளன், (10)
காய்தலும் உண்டு அக் கள்வெய் யோனே !

திணை - வெட்சி
துறை – உண்டாட்டு

இயற்றியவர் - புலவர் உலோச்சனார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

2. யானையை வீழ்த்திய வீரன்
(பாடல் எண் – 274)

நீலக் கச்சைப் பூவார் ஆடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல் வரும் களிற்றொடு வேல் துரந்து;இனியே;
தன்னும் துரக்குவன் போலும், ஒன்னலர்
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக் (5)
கையின் வாங்கித் தழீஇ
மொய்ம்பின் ஊக்கி மெய்க் கொண் டனனே!

திணை - தும்பை
துறை – எருமை மறம்

இயற்றியவர் - புலவர் உலோச்சனார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com